திருகோணமலை மூதூர் மல்லிகைத்தீவில் கடந்த 28 ஆம் திகதி மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்குட்படுத்திய சூத்திரதாரிக்குரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்ககோரியும்  குறித்த சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வாழைச்சேனை எதிர்கால சிந்தனைக்கான இளைஞர்கள் மற்றும் பொது அமைப்புக்களினால் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று வியாழக்கிழமை வாழைச்சேனையில் இடம்பெற்றது.

குறித்த பேரணி வாழைச்சேனை மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து வாழைச்சேனை பிரதான வீதி வழியாக வாழைச்சேனை பொலிஸ் நிலையம் வரை பேரணி சென்றடைந்ததும் ஆர்ப்பாட்டக் காரர்களினால் வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் நீதியமைச்சர்இ சட்டமா அதிபர்இ சட்டமா அதிபர் திணைக்களம்இ உயர் நீதிமன்ற நீதியரசர் ஆகியோருக்கு வழங்குவதற்கான மகஜர் ஒன்றையும் வழங்கியதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

குறித்த பேரணிக்கு ஆதரவாக வாழைச்சேனை ஆலயத்தின் ஆலய நிருவாகங்கள்இ சிவில் அமைப்புக்கள்இ பெற்றோர்கள்இ பெண்கள் சமூக அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் என பலர் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கருத்துத்தெரிவிக்கையில்இ

மூன்று பாடசாலைச் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்இ வன்புணர்வுக்குட்பட்ட சிறுமிகளின் எதிர்கால நலன்கருதி குற்றம் இழைத்தவர்களை பொலிசார் சரியான முறையில் இனம் கண்டு உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் முறையாக முன்னெடுக்கவேண்டும். குற்றம் இழைத்தவருக்கு கூடிய தண்டனைபெறும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.