ஒரு ரூபாவினால் 13 ஆம் திகதி நள்ளிரவு அதிகரிக்கப்பட்ட பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலையினை மீண்டும் பழைய விலையின் கீழ் கொண்டுவர தீர்மானித்துள்ளனர்.

இன்று காலை இடம் பெற்ற அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்க நிர்வாக குழு கூட்டத்தில், இது தொடர்பான தீர்மானத்திற்கு வந்ததாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.