ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள நகானோ மலைப் பகுதியில் சுற்றுலா பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகியுள்ளனர்.

ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள யமனோச்சி நகரில் உள்ள  பனிச்சறுக்கு போட்டிகள் நடைபெறும் பிரபல  ஸ்கிரிசார்ட்டிற்கு 41 சுற்றுலாபயணிகளுடன் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு  குழுவினர் நேற்று மாலை டோக்கியோவில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.