ஏறாவூர் இரட்டைக் கொலை விவகாரம் : ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய கைதிகள்! (படங்கள்)

Published By: Ponmalar

31 May, 2017 | 12:36 PM
image

ஏறாவூர் இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களை இன்றைய தினம் ஏறாவூர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின் வழக்கு முடிவடைந்து சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றிய போது, குறித்த சந்தேக நபர்கள் அங்கிருந்த ஊடகவியலாளர்களை திட்டியதுடன் சந்தேக நபர்கள் அணிந்திருந்த செருப்பைக் காட்டியும் அச்சுறுத்தியுள்ளனர்.

குறித்த வழக்கு தொடர்பாக ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு வழக்குத் தவணைக்கும் அறிக்கையிட செல்லும் வேளையில் ஏறாவூர் இரட்டைக் கொலை சந்தேக நபர்கள் இவ்வாறு நடந்துக்கொள்வதுடன், தொடர்ந்தும் ஊடகத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பான 6 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல் எதிர்வரும் ஜுன் மாதம் 9 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில், ஏறாவூர் சுற்றுலா நீதவான் மன்றில் இன்று (31) இவர்களை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இவர்களுக்கான விளக்கமறியலை நீடித்துள்ளார்.

ஏறாவூர், முகாந்திரம் வீதிக்கு அருகில் அமைந்துள்ள தங்களின் வீட்டில் வசித்துவந்த தாயான நூர் முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவரிகளின் சடலங்கள் கடந்த வருடம் செப்டெம்பர் 11 ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13