கண்டி - குருணாகல் வீதியின் 8 ஆம் மைல் கட்டைப் பகுதியில் மரமொன்று முறிந்து விழுந்ததில் குறித்த பகுதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மரம் முறிந்து விழுந்ததில் முச்சக்கர வண்டியொன்று சேதமடைந்துள்ளதுடன், டிப்பர் ரக வாகனமொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதனால் குறித்த பகுதிக்கு செல்லும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை சீரற்ற காலநிலை தொடருவதால் மக்கள அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.