புகைத்தல் மற்றும் ஏனைய புகை­யிலை பாவ­னையால் வரு­டாந்தம் உலகில் 7  மில்­லி­ய­னுக்கும் அதி­க­மானோர் பலி­யாகி வரு­வ­தாக உலக சுகா­தார ஸ்தாபனம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தது. 

 அத்­துடன் புகை­யிலை உற்­பத்தி,  விநி­யோகம் மற்றும் கழி­வு­களால் சுற்­றுச்­சூ­ழ­லுக்கும் பாரிய பாதிப்பு ஏற்­ப­டு­வ­தாக அந்த ஸ்தாபனம் எச்­ச­ரித்­துள்­ளது.

இன்று புதன்­கி­ழமை உலக புகை­யிலை  எதிர்ப்பு தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­வ­தை­யொட்­டியே மேற்­படி எச்­ச­ரிக்­கையை விடுத்­துள்­ளது.

இந்­நி­லையில் புகை­யிலை பாவனை தொடர்பில் கடு­மை­யான சட்ட விதிகள் தேவைப்­ப­டு­வ­தாக வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அந்த வகையில் நாடுகள் வேலைத் தலங்­க­ளிலும் உள்­ளக பொது இடங்­க­ளிலும் புகைப்­ப­தற்கும் தடை விதிப்­ப­துடன் புகை­யிலை உற்­பத்­தி­களை சந்­தைப்­ப­டுத்­து­வ­தற்கு  முட்­டுக்­கட்­டை­களை ஏற்­ப­டுத்தி   சிக­ரெட்­டு­களின் விலை­களை உயர்த்த வேண்டுமென உலக சுகா­தார ஸ்தாபனம்  அழைப்பு விடுத்­துள்­ளது.

“புகை­யி­லை­யா­னது நம் அனை­வ­ருக்­கு­மான அச்­சு­றுத்­த­லா­க­வுள்­ளது"  என உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் தலைவர் மார்­கரெட் சான் வெளி­யி­ட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.

புகை­யிலை வறு­மையை தீவி­ரப்­ப­டுத்தி  பொரு­ளா­தார உற்­பத்தித் திறனைக் குறைத்து உள்­ளக வளியை மாசாக்கி தீய விளை­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக உலக சுகா­தார ஸ்தாப­னத்தால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 புகை­யிலை பாவ­னையால் ஏற்­படும் மர­ணங்­களின் அளவு தொடர்ந்து அதி­க­ரிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக  கூறப்பட்டுள்ளது.

2030  ஆம் ஆண்­டுக்குள் புகை­யி­லை­களால் இடம்­பெறும் மர­ணங்­களில் 80  சத­வீ­த­மா­ன­தற்கும் அதி­க­மான மர­ணங்கள் அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு­களில் இடம்­பெறும்  நிலை காணப்­ப­டு­வ­தா­கவும்  புகை­யிலைக் கம்­ப­னிகள் தமது புதிய சந்­தை­களை விரி­வு­ப­டுத்த அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு­க­ளையே இலக்­கு­வைத்து வரு­வ­தா­கவும் மேற்­படி அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

 புகை­யிலை செய்­கைக்கு பெரு­ம­ள­வான பச­ளை­களும் பூச்­சி­நா­சி­னி­களும் தேவைப்­ப­டு­கி­றது எனவும் அந்தச் செய்­கை­யா­னது  பல நாடு­களில் காடுகள் அழிக்­கப்­ப­டு­வ­தற்கு வித்­திட்டு வரு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்ள உலக சுகா­தார ஸ்தாபனம்இ  அதன் உற்­பத்­தியின் போதும்  போக்­கு­வ­ரத்தின் போதும்  விநி­யோ­கத்தின் போதும் பெரு­ம­ளவு கழிவு சுற்­றுச்­சூ­ழலில் விடு­விக்­கப்­ப­டு­வ­தாக குறிப்­பிட்­டுள்­ளது.

அத்­துடன் புகை­யி­லையை பத­னி­டு­வ­தற்கு  பெரு­ம­ளவு விறகு தேவைப்­ப­டு­வ­தா­கவும் 300  சிக­ரெட்­டு­களைத் தயா­ரிப்­ப­தற்கு விற­காக ஒரு மரம் தேவைப்­ப­டு­வ­தாக  மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.

அத்துடன்  புகையிலைத் தொழிற்றுறை யால்  வருடாந்தம் சுமார் 4  மில்லியன் காபனீரொட்சைட் வளிமண்டலத்தில் சேர்வ 

துடன் அதன் கழிவுகள் மூலம் சுற்றுச் சூழலுக்கு 7,000  நச்சு இரசாயனங்கள் விடுவிக்கப்படுவதாக  உலக சுகாதார ஸ்தாபனத் தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.