வடக்கு, கிழக்கில் இடம்பெறும் மக்கள் போராட்டங்கள் தவறல்ல

16 Nov, 2015 | 02:10 PM
image

அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­காக வடக்கு கிழக்கில் மக்கள் முன்­னெ­டுக்கும் போராட்­டங்­களை மக்­களின் குர­லா­கவே கவ­னிக்­கப்­பட வேண்டும். 

அப்­பாவி தமி­ழர்கள் அநா­வ­சி­ய­மாக தண்­டிக்கப்படாது உட­னடி­யாக விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும் என தூய்­மைக்­கான நாளை அமைப்பின் தலைவர் அத்து­ர­லியே ரத்ன தேரர் தெரி­வித்தார். இந்த அர­சாங்­க­மா­வது தமிழ் மக்­களின் விட­யத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரி­வித்தார்.

அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் இன்று நாட்டில் பல்­வேறு கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் கைதி­களின் விடு­தலை தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

நாம் கடந்த காலங்­களில் பல சிக்­க­லுக்கு முகம் கொடுத்­தி­ருந்தோம். கடந்த முப்­பது ஆண்­டு­கா­ல­மாக இந்த நாடு தவ­றான பாதையில் பய­ணித்து வந்­தது. ஆயுத மோதல்­க­ளிலும் கொள்ளை, கொலை என பல சிக்­கல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்­துள்ளோம். எனினும் இப்­போது அவ்­வா­றான நிலை­மைகள் எதுவம் நாட்டில் இல்லை. கடந்த காலங்­களில் இலங்­கையின் குழப்­பங்­களும் அச்­சு­றுத்­தலும் ஏற்­பட சிங்­கள தலை­மை­களும் பொறுப்புக் கூற வேண்டும்.

அவ­சி­ய­மான உரி­மை­களை வடக்கு மக்­க­ளுக்கு அன்று பெற்றுக் கொடுத்­தி­ருந்தால் இவ்­வா­றான இழப்­புகள் எவையும் இடம்­பெற்­றி­ருக்­காது. அதேபோல் கடந்த பத்து ஆண்­டு­களில் இலங்­கையின் அர­சியல் பாதை மிகவும் மோச­மா­ன­தா­கவே அமைந்­தது. நாட்டின் வளங்கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டன, மதக்­க­ல­வ­ரங்­க­ளையும் இன முரண்­பா­டு­க­ளையும் தோற்­று­விக்கும் வகையில் அர­சாங்கம் மிகவும் மோச­மாக நடந்­து­கொண்­டது. அபி­வி­ருத்­திகள் என்ற பெயரில் இலங்­கையின் வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­றனர். அதேபோல் வடக்கில் தமிழ் மக்கள் எதி­ரிகள் என்ற கண்­ணோட்­டத்­தி­லேயே இவர்கள் பார்த்­தார்கள்.

யுத்­தத்தில் காண­மல்­போன பொது­மக்கள், பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்பில் கடந்த அர­சாங்கம் எவ்­வாறு செயற்­பட்­டது என்று கேட்டால் எம்மால் உறு­தி­யாக எதையும் தெரி­விக்க முடி­யாது. அதேபோல் யுத்த கால­கட்­டத்தில் சந்­தே­கத்தின் பெயரில் கைது செய்­யப்­பட்ட பொது­மக்கள் தொடர்­பிலும் முன்­னைய அர­சாங்கம் எந்­த­வித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை.

இப்­போது புதிய அர­சாங்கம் இந்த விட­யங்­களில் அதிக அக்­கறை செலுத்த வேண்டும். இந்த நாட்டில் தமிழ் மக்கள் ஒரு­வி­தத்­திலும் சிங்­கள மக்கள் ஒரு விதத்­திலும் கவ­னிக்­கப்­படக் கூடாது. அனைத்து மக்­க­ளையும் சம உரி­மை­க­ளுக்கு அமை­யவே கவ­னிக்­கப்­பட வேண்டும். உண்­மையில் குற்­ற­வா­ளி­க­ளாக நிரூபிக்­கப்­பட்ட நபர்கள் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமைய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். ஆனால் குற்­ற­வா­ளிகள் இல்­லாத தமிழ் கைதி­களை உட­ன­டி­யாக விடு­விக்­கப்­பட்ட வேண்டும்.

இன்று வடக்­கிலும் கிழக்­கிலும் இடம்­பெற்­று­வரும் மக்கள் போராட்­டங்­களை எக்­கா­ர­ணத்தை கொண்டும் குற்றம் சுமத்தமுடியாது. அவர்களின் உறவுகளை விடுவிக்கக்கோரி கோரிக்கை விடுப்பது நியாயமான ஒன்றாகும். அவர்களின் குரல் தமிழ் மக்களின் குரல்கள் என்ற ரீதியில் கவனிக்கப்படவேண்டும் ஆகவே அரசாங்கம் இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58