கொட்டாஞ்சேனையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் இதுவரை உயிருடன் இருப்பதாக தகவல் இல்லாத நிலையில், சடலங்கள் கிடைக்காத போதும் சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் 108 ஆவது அத்தியாயத்தின் பிரகாரம் அவர்கள் உயிருடன் இல்லை என தீர்மனைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனயவுப் பிரிவு நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தது. 

அத்துடன் இவ்வாறு கடத்தப்ப்ட்டு தற்போது கொல்லப்ப்ட்டுள்ளதாக நம்பப்படும் இரு தமிழர்களுக்கும் சொந்தமான தொலைபேசிகள், தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்ரை பயன்படுத்தியதாக கூரப்படும் கடற்படை லெப்டினன் கொமாண்டர் தயானந்த, சிப்பாய் சுசந்த மற்றும் ரியர் அத்மிரால் ஆனந்த குறுகே ஆகியோர் குறித்த தமிழர்களின் வேன் துண்டு துன்டாக வெட்டப்ப்ட்ட சம்வம் உள்ளிட்ட அனைத்து விடயம் தொடர்பிலும் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் குற்றப் புலனயவுப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான் ஜெயராம் டொஸ்கியிடம் தெரிவித்தது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் இருந்து வெல்லம்பிட்டிய பகுதியை நோக்கி தனது பீ.ஏ.6023 என்ற இலக்கத்தை உடைய வேனில் பயணித்த போது கடத்தப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன் மற்றும் உரவினரான பொரளை, வனாத்தமுல்லையைச் சேர்ந்த இரத்னசாமி பரமானத்தன் ஆகியோரது கடத்தல் தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதே குற்றப் புலனயவுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் சுனில் இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார்.

கனம் நீதிவான் அவர்களே, இந்த விவகாரம் தொடர்பில்  ஆரம்பத்தில் சி.சி.டி. யே விசாரணைச் செய்தது.  இது குரித்து நாம் குறித்த விசாரணை அதிகாரியை நாம் விசாரணைச செய்தோம். இதன் போது காணாமல்போன இருவரின் தொலைபேசிகளை, நகைகளை  கடற்படை லெப்டினன் கொமான்டர் தயானந்தவே பயன்படுத்திய நிலையில், அதற்காக அவர்களை கைது செய்ய தீர்மனைக்கப்பட்டது. எனினும் இரகசிய அறிக்கை ஊடாக  அவரைக் கைது செய்வது தடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அப்போது கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த தற்போது தாஜுதீன் கொலை விவகாரத்தில் விளக்கமறியலில் இருக்கும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவிடம் விசாரணை செய்யவேண்டியுள்ளது. இது தொடர்பில் ஜூன் ஒன்று, ஜூலை முதலாம் திகதிகளில் விசாரணைகளை செய்ய மன்றின் அனுமதியைக் கோருகின்றோம்.

இதனைவிட இந்த சம்பவத்துக்கு கடற்படையின் ரியர் அட்மிரல் ஆனந்த குருகே, லெப்டினன் கொமாண்டர் தயானந்த மற்றும் கடற்படை சிப்பாய் சுசந்த ஆகியோர் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர். ' என தெரிவித்தார்.

புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைக்கு அனுமதியளித்த நீதிவான் ஜெயராம் டொஸ்கி, வழக்கை எதிர்வரும் ஜூன் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அத்துடன் அதுவரை தற்போது கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் வெலிசறை கடற்படை வைத்தியசாலையின் நிறைவேற்று பணிப்பாளர் தம்மிக அனில் மாமாவின் பிணைக் கோரிக்கையை நிராகரித்த நீதிவான் அவரின் விளக்கமறியலையும் அதுவரை நீடித்தார்.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொட கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி தனது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரான லெப்டினன் கொமாண்டர் முனசிங்க ஆரச்சிகே தொன் நிலந்த சம்பத் முனசிங்கவுக்கு எதிராக செய்த முறைப்பாடானது மேலதிக விசாரணைகளுக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபரினால் 2009 ஜூன் 10ம் திகதி பொலிஸ் மா அதிபரால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பாரப்படுத்தப்பட்டது.

இந் நிலையில் நாம் முன்னெடுத்த விசாரணைகளில் சம்பத் முனசிங்கவின் கீழ் இருந்த கரண்ணாகொடவின் பாதுகாப்பு அணியில் இருந்த  லெப்டினன் கொமாண்டர் ஹெட்டிஆராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆராச்சியின் கீழான குழுவே இந்த கடத்தல்களை முன்னெடுத்திருந்தமை தெரியவந்தது.

எலகந்த, கொட்டாஞ்சேனை, கொழும்பு 13, தெஹிவளை - பெர்ணான்டோ வீதி, கட்டுநாயக்க விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு உக்திகளை பயன்படுத்தி இக்கடத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சூசைப்பிள்ளை அமலன் லியோன், ரொஹான் ஸ்டென்லி லியோன், கஸ்தூரி ஆரச்சிகே எண்டன், கஸ்தூரி ஆரச்சிகே ஜோன் ரீட், ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஷ்வரம் ராமலிங்கம், மொஹமட்டிலான் ஜமால்டீன், சாஜித் மொஹம்மட், அலி அஸ்வர் அல்லது ஹாஜியார் ஆகிய 11 பேர் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை முகாம் வளாகத்தில் உள்ள கடல் மற்றும் சமுத்திரவியல் விஞ்ஞான பீடத்தின் அருகே உள்ள கண்சைட் எனும் நிலத்தடி சிறைக் கூட்டில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொமாண்டர் ரணசிங்க சுமித் ரணசிங்க என்பவரின் கீழ் இருந்த அந்த சிறையில் சட்ட விரோதமாக மனித உரிமைகள் மீறப்படும் வண்ணம் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் கடந்த 2008 ஆகஸ்ட் 9ஆம் திகதி 38/28 ரத்னம் வீதி கொட்டாஞ்ச்சேனை எனும் முகவரியைச் சேர்ந்த கஸ்தூரி ஆராச்சிகே ஜோன் ரீட் கடத்தப்பட்ட போது அவரது 56 - 5536 எனும் டொல்பின் ரக வானும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. இந்த வேனானது கடற்படை இலக்கத்தகட்டுடன் 6021 எனும் இலக்கத்தின் கீழ் திருகோணமலை கடற்படை முகாமில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனை புலனாய்வுப் பிரிவினர்  கடந்த 2015 நவம்பர் 18ஆம் திகதி கைப்பற்றினர். தற்போது அந்த வான் திருகோணமலை குற்றப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் உள்ளது. இந்த வாகனத்தின் கதவுகள் வெலிசறை கடற்படை முகாமின் உளவுப் பிரிவுக்கு சொந்தமான இரகசிய அறை ஒன்றில் இருப்பதாக மேலதிக விசாரணைகளில் புலனயவுப் பிரிவுக்கு  தகவல் கிடைத்தது. அதன்படி  நீதிமன்ற உத்தரவைப் பெற்று அங்கு தேடுதல் நடத்தினர்.

2016 பெப்ரவரி 11ஆம் திகதி நாம் செய்த சோதனையில் 72 துண்டுகளாக பிரிக்கப்பட்ட வாகனம் மீட்கப்பட்டது. அத்துடன் அந்த அறையில் சீ.ஜீ 125 ஈ - 1810450 எனும் எஞ்சின் இலக்கத்தைக் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. 37ஆவது துண்டில் இருந்து வான் ஒன்றின் செஸி இலக்கம் இரசாயன பகுப்பாய்வு மூலம் கண்டறியப்பட்டது. அதுவே காணாமல் போன வடிவேல் லோகநாதன் என்பவருக்கு உரியது என்பது அப்போதே தெரியவந்தது. 

இதனையடுத்தே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் இருந்த  லோகநாதன் மற்றும் அவருடன் வேனில் வெல்லம்பிட்டி நோக்கி பயணிக்கும் போது காணாமல் போன ரத்னசாமி ஆகியோர் தொடர்பிலான விசாரணைகளை புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்தனர்.

இதன் போது பரமாந்ந்தன் பயன்ப்டுத்திய தொலைபேசியில் 0773952046 எனும் இலக்க சிம் அட்டை உட்செலுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளமை எமி இலக்கம் ஊடாக கண்டுபிடிக்கப்ப்ட்டது. அந்த கையடக்கத் தொலைபேசியானது பஸ் ஒன்றில் விழுந்து கிடந்ததாக கூறி கடற்படை வீரர் ஒருவரினால் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கையளிக்கப்பட்டுள்ளது.  அதனை இவ்வாறு வேறு இலக்கத்தில் பயன்படுத்தியவர் தற்போதையை லெப்டினன் கொமாண்டர் தயாநந்த என்பது எமது விசாரணைகளில் தெரியவந்தது.அதற்கு மேல் அந்த விசாரணை இடம்பெறாது அவை மூடி மறைக்கப்பட்டுள்ளன. என்பது புலனாய்வுப் பிரிவினரால் கண்டறியப்பட்டமைன் குறிப்பிடத்தக்கது.