ஆடவர்களுக்கான முன்னணி உயர் தர ஆடையலங்கார வர்த்தக நாமமான MBRK ஆனது, வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்தக்கூடிய புதுமையான திட்டமொன்றை அறிமுகம் செய்திருந்தது. 

MBRK உற்பத்திகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் மாபெரும் சீட்டிழுப்பில் பங்கேற்று இக்காலத்தில் அனைவரும் பெரிதும் விரும்பும் MacBooksf கள் 6 இனை வெற்றிகொள்ளும் வாய்ப்பை பெற்றனர்.

இதற்கு மேலதிகமாக, 20 வாடிக்கையாளர்கள் Branded கைக்கடிகாரங்களையும் வென்றனர். வெற்றியாளர்களை மேலும் பரவசப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரிசளிப்பு விழாவில் இப்பரிசுகள் வழங்கப்பட்டன. ரூபா 2500 அல்லது அதற்கு மேல் பெறுமதி கொண்ட MBRK உற்பத்திகளை கொள்வனவு செய்யும் அனைவரும் சீட்டிழுப்பில் பங்குபற்றுவதற்கான தகுதியை பெற்றிருந்தனர்.

“கடந்த 20 வருடங்களாக நான் NOLIMIT உடன் இணைந்துள்ளேன். NOLIMIT மற்றும் Glitz இன் வழமையான வாடிக்கையாளராக இருந்து வருகிறேன்” என பரிசை வென்ற ஸ்டெஃபான் ரொட்ரிகோ தெரிவித்தார்.

மற்றுமொரு வெற்றியாளரான ஷெஹான் ஸ்லெம்மர்மன், “எனது பட்டமளிப்பு விழாவிற்காக ஷர்ட் ஒன்றை வாங்க வந்த நான் அதிர்ஷ்டவசமாக MacBook இனை வென்றேன்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நவநாகரிக ஆர்வலர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் MBRK வர்த்தக நாமத்தை அறிமுகம் செய்ததன் நோக்கம் குறித்து கருத்து தெரிவித்த NOLIMIT இன் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ரனீஸ் ஷெரிஃப்,

“நவநாகரிக ஆடை அணிகலன்களை சந்தைப்படுத்துவதில் இரு தசாப்தத்திற்கும் மேலான அனுபவத்தை நாம் கொண்டுள்ளதுடன் இந்த ஊக்குவிப்பு திட்டமானது மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளது. கொடுக்கும் பணத்திற்கு பெறுமதி சேர்க்கும் தரமான ஆடை, அணிகலன்களை வழங்குவதன் மூலமாக உரிய வாடிக்கையாளர்களை சென்றடையவும், MBRK வர்த்தகநாமத்தை மேம்படுத்தவும் முடிந்துள்ளது. தரமான நவநாகரிக ஆடையுடன் Corporate உலகில் தனித்து விளங்க நாடும் ஆண் Professionals கள் மத்தியில் அதிகம் விரும்பத்தக்க வர்த்தக நாமமாக MBRK விளங்கும் என நாம் திடமாக நம்புகிறோம்” என்றார்.

நவநாகரிக தோற்றத்தில் அதிக கரிசணை கொண்ட, உயர்தரம் மற்றும் ஸ்டைலை நாடும் ஆடவர்களுக்கான தலைசிறந்த தெரிவாக MBRK காணப்படுகின்றது. ஆடவர்களுக்கான நவநாகரிக formal wear, Smart formal wear, Urban wear, Casual wear Club wear ஆகிய விரிவானத் தெரிவுகளை MBRK கொண்டுள்ளது. பல்வேறு Texture கள் மற்றும் வர்ணத்தெரிவுகள், சாதாரண அல்லது Double cuff உடனான Regular மற்றும் Slim fit cuts என பல்வேறு ஷர்ட் தெரிவுகளை வழங்கும் முன்னணி வர்த்தக நாமமாக MBRK உள்ளது.

உறுதி, நீடித்த தன்மை மற்றும் இலகுவில் கிழியாத் தன்மை போன்றவற்றிற்கு புகழ்பெற்ற எகிப்து Giza பருத்தியினால் தைக்கப்பட்ட உயர் தெரிவாக MBRK Premium தெரிவுகள் விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்க விஷேட அம்சமாகும்.

நாடு முழுவதும் 20 காட்சியறைகளுடன் இலங்கையின் மிகப்பெரிய நவநாகரிக ஆடையலங்கார நிறுவனமாக NOLIMIT உள்ளதுடன், 1992 ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றையும் வென்றுள்ளது. MBRK உற்பத்திகள் அனைத்து NOLIMIT மற்றும் Glitz காட்சியறைகளிலும் கிடைக்கப் பெறுகின்றன.