இலங்கையில் தரமான நோயாளர் பராமரிப்பினை பேணுவதற்கான ஆய்வுகூட அங்கீகாரத்தின் முக்கியத்துவம்

Published By: Priyatharshan

30 May, 2017 | 05:00 PM
image

சுகாதார பராமரிப்பாளரின் சிறந்த உறுதிப்பாடு என்பது சாட்சியுடனான மருத்துவத்தில் பயிற்சி பெறுவதுடன் நோயாளியையும் குணப்படுத்துதல் ஆகும். மருத்துவ ஆய்வுகூடங்களின் தொடர்ச்சியான அதிகரிப்புடன் நோயாளி ஒருவருக்கு தனக்கான சேவைகளை பெறுவதில் பல தெரிவுகள் காணப்படுகின்றன.

துல்லியமற்ற அறிக்கைகள் நோயாளிக்கு அதிக செலவையும் நேர விரயத்தையும் ஏற்படுத்துவதுடன் அசௌகரியம் காரணமாக மீள் பரிசோதனை அல்லது மீள் மாதிரிகளை வழங்குவதற்காக வேறொரு ஆய்வுகூடத்திற்கு செல்ல நேரிடலாம்.

இருப்பினும் துல்லியமான அறிக்கைகள் மற்றும் சரியான நேரத்தில் முடிவுகளை விநியோகித்தல் போன்றவற்றை உறுதி செய்வதற்கான பொறுப்பினை ஆய்வுகூடங்கள் கொண்டுள்ளன.

ஆய்வுகூட அங்கீகாரத்தின் முக்கியத்துவம் குறித்து இரசாயன நோய்குறியியல் ஆலோசகரான மருத்துவர் திருமதி.சரோஜா சிறிவர்தன கருத்து தெரிவிக்கையில்,

“ஆய்வுகூடத்தினால் கடைபிடிக்கப்படும் செயல்முறைகளின் தரம் மதிப்பிடல் மற்றும் முடிவுகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தல் ஆகியவற்றை மூன்றாம் தரப்பினரால் வழங்கப்படுதலையே அங்கீகாரம் எனப்படுகிறது” என்றார்.

அனைத்து நோயாளர்களும் மிகத் துல்லியமான மற்றும் நம்பகமான பரிசோதனை அறிக்கைகளை பெறவே விரும்புவதுடன் அதுவே மருந்துவர்களை சரியான மருந்துகளை வழங்க வழிவகுக்கிறது. அங்கீகாரம் பெற்ற ஆய்வுகூடத்தை தெரிவு செய்தலின் போது சரியான தீர்மானத்தை எடுப்பதற்கான வழிகாட்டல்கள் நோயாளிக்கு வழங்கப்பட வேண்டும்.

இருந்தபோதிலும், அங்கீகாரத்திற்கான சட்ட ரீதியான தேவைப்பாடு இலங்கையில் இல்லை. இருப்பினும், பல்வேறு மருத்துவ ஆய்வுகூடங்கள் அங்கீகாரத்தை பெறுவதற்காக குறிப்பிட்டளவில் முதலீடு செய்துள்ளன.

அங்கீகாரத்திற்கான முதுகெலும்பாக தேசிய தர நிலைகளை வழங்குவதற்காக ஆய்வுகூடத்தின் செயற்பாடுகளை மதிப்பிடுவதற்கான கட்டமைப்பை இலங்கை அங்கீகார சபை (SLAB) வழிநடத்தி வருகிறது. தரத்திற்கான சர்வதேச நிறுவகத்தின் ISO 15189 ஆய்வுகூட தரமானது தர முகாமைத்துவ முறைமைகளை குறிப்பிடுவதுடன் மருத்துவ ஆய்வுகூடங்களின் தரம் மற்றும் திறனுக்கான குறிப்பிட்ட தேவைப்பாட்டினை உறுதி செய்வதாக வடிவமைக்கப்பட்டுள்ளன” என மருத்துவர்.சிறிவர்தன சுட்டிக்காட்டினார்.

“SLAB ஆனது ஆய்வுகூடங்களின் தரத்தினை மதிப்பீடு செய்வதன் பொருட்டு தர அங்கீகரத்திற்கான தேசிய தரமான தரநிலைகளை வழங்குகின்றது. ஒவ்வொரு மருத்துவ ஆய்வுகூடத்திலும் அங்கீகாரமளிக்கப்பட்ட பரிசோதனைகளை SLAB வலைத்தளத்தில் பொதுமக்கள் பார்வையிடலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“அமெரிக்கன் நோய்குறியியல் கல்லூரியானது அமெரிக்காவின் தொழில்முறையான நோயியல் நிபுணர்களைக் கொண்ட அமைப்பாகும். இவ்வமைப்பானது உலகத்தரம் வாய்ந்த மிகச்சிறந்த தரநிலையை (Gold Standard) நிர்ணயிக்கும் அமைப்பாகிய வகையில், உலகிலுள்ள குறியீட்டு மருத்துவ ஆய்வுகூடங்களின் மருத்துவ சோதனைகளை மிகச்சிறந்த நிலையில் உள்ளதா என்பதை நிர்ணயித்து உறுதியளிக்கிறது” என மருத்துவர் சிறிவர்தன தெரிவித்தார்.

“இந்த அங்கீகாரத்தை பெற விரும்பும் ஆய்வுகூடங்கள் குறித்து அவர் தெரிவித்ததாவது,

 உலகின் மிகக் கடுமையான ஆய்வுகூட அங்கீகார திட்டங்களுள் ஒன்றாக CAP அங்கீகாரம் உள்ளதுடன், எனவேதான் CAP அங்கீகாரம் பெற்ற ஆய்வுகூடங்கள் மதிப்பு வாய்ந்தவையாக உள்ளன. அருகிலிருக்கும் ஆய்வுகூடங்களின் அங்கீகாரம் குறித்து தெரியுமிடத்து, தனது ஆய்வுகூட பரிசோதனைகளை எங்கு பெறுவது என்பதற்கான தெரிவை மேற்கொள்வதில் எந்தவொரு நோயாளிக்கும் சிக்கல் எழாது” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57