இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளநீர் உயர்ந்து வருவதாகவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ள நீர் உயர்வடைந்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று அங்கேயே தங்கியிருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உதவி அல்லது நன்கொடை தொடர்பான தேவைகளுக்கு 117 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது,