6 ஆவது இருபதுக்கு20 உலகக்கிண்ணம் இந்தியாவில் எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை 16 நாடுகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரின் உத்தியோகபூர்வ கிண்ணம் இலங்கை வரவுள்ளது.

உலகம் முழுவதும் வலம் வரும் இக்கிண்ணம், நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இலங்கையில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இக் கிண்ணமானது மக்கள் பார்வைக்காக எதிர்வரும் 17ஆம் திகதி காலி முகத்திடலில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 இல் பங்களாதேஷில் இடம்பெற்ற 5 ஆவது தொடரின் கிண்ணத்தை இலங்கை அணி தனதாக்கிக் கொண்டது.

இருபதுக்கு20 கிண்ணத்திற்கான தொடர் 2007 ஆம் முதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.