வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு ஆரம்பித்துள்ளது.

இதன்படி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரது 68 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளன. மொத்தமாக 128 சொத்துக்கள் முறைகேடாகச் சேர்க்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருப்பினும், அவற்றுள் 68 சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்படவுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் உள்ள சொத்துக்கள் சிலவற்றைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள் தமிழக அரசுக்குச் சொந்தமானதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.