களுத்துறையில் 54 பேர் பலி : 57 பேரைக் காணவில்லை

Published By: Priyatharshan

30 May, 2017 | 11:01 AM
image

களுத்­துறை மாவட்­டத்தில் இயற்கை அனர்த்தம் கார­ண­மாக  54 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 69 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். அத்­துடன் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் கார­ண­மாக மேலும் 57 பேர் காணாமல் போயுள்­ள­தாக களுத்­துறை மாவட்ட செய­லாளர் யூ.டி.சி. ஜயலால் தெரி­வித்தார்.

களு கங்­கையின் நீர் மட்டம் ஓர­ளவு குறைந்­துள்ள போதும் தாழ்நிலப் பகு­தி­களில் தொடர்ந்தும் வெள்ள நிலைமை நீடிப்­ப­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.

 இது­வரை களுத்­துறை மாவட்­டத்தில் 29199 குடும்­பங்­களைச் சேர்ந்த 107906 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் அவர்­களில் 1602 குடும்­பங்­களைச் சேர்ந்த 6034 பேர் 60 பாது­காப்­பான இடங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­க­ளுக்கு சொந்­த­மான 91 வீடுகள் முற்­றா­கவும் 805 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன.

களுத்­துறை மாவட்­டத்தில் ஏற்­பட்ட  உயி­ரி­ழப்­புக்­களில் பெரும்­பா­லா­னவை மண் சரி­வி­னா­லேயே ஏற்­பட்­டுள்­ளன. குறிப்­பாக களுத்­துறை மாவட்­டத்தின் 5 பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளுக்குட்­பட்ட பகு­தி­களில் 26 பாரிய மண் சரிவு சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

களுத்­துறைஇ மது­ரா­வல, தொடங்­கொட பிர­தேச செய­லகப் பிரி­வு­களின் கீழ் உள்ள பகு­திகள் பல நேற்றும் அபாய எச்­ச­ரிக்­கையின் கீழேயே   இருந்­தன. மேல் மாகா­ணத்­துக்கு தொடர்ந்து மழை பெய்யக் கூடிய அபாயம் காணப்படும் நிலையில் களுத்­துறை மாவட்­டத்­துக்­கான எச்­ச­ரிக்கை தொடர்­கி­றது.

 குறிப்­பாக  புளத்சிங்­கள உட்­பட பல பகு­தி­களில் பதி­வான மண்சரிவில் காணாமல் போனோரை தேடும் பணிகள் தொடர்­கின்­றன. இந் நிலையில் மீட்புப் பணி­களை இரா­ணு­வத்­தினர் தொடரும் நிலையில் கடற்­ப­டை­யி­னரும் விமா­னப்­ப­டை­யி­னரும் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­கான நிவா­ரணப் பணி­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இத­னி­டையே இரா­ணுவ தள­பதி லெப்­டினன்ட் ஜெனரல் கிரி­ஷாந்த டி சில்வா புளத்­சிங்­கள பிர­தே­சத்தில் ஏற்­பட்ட பாரிய மண்­ச­ரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்­கிய பொதுமக்­களை மீட்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­பார்வை  செய்தார்.  இரா­ணு­வத்­தினர் 15 பீ.டி.ஆர். அனர்த்த மீட்பு வாகனம் மற்றும் 30 இரா­ணுவ பட­கு­களில் சென்று மீட்புப் பணி­களை மேற்­கொண்­டனர். இந்த மீட்புப் பணி­க­ளுக்கு இரா­ணு­வத்தின் 1600க்கும் மேலான படை­வீ­ரர்கள் ஈடு­பட்­ட­துடன் மேலும் மேற்கு பாது­காப்பு படை கட்டளைத் தள­பதி  மேஜர் ஜெனரல் சுதந்த ரண­சிங்க மற்றும் 58 ஆவது படைப் பிரிவின் படைத் தள­பதி பிரி­கே­டியர் சுமித் அத்­த­பத்து ஆகி­யோரின்  கண்­கா­ணிப்பில் இந்த பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இரா­ணுவ தள­ப­தியின் பணிப்­பு­ரைக்கு அமைய இராணுவ வைத்திய சேவை பணிப்பகத்தினால் இந்த பிரதேசத்திற்கு மருத்துவ சேவையின் நிமித்தம் 5 குழுக்கள் அனுப்பப்பட்டு இப்பிரதேசத்தில் பாதிப் புக்குள்ளான பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58