வெள்­ளத்தை பார்­வை­யிடச் சென்ற 18 பேர் பலி ; அநா­வ­சிய பய­ணங்­களை தவிர்க்­கு­மாறு பொலிஸ் திணைக்­களம் கோரிக்கை 

Published By: Priyatharshan

30 May, 2017 | 09:55 AM
image

நாட்டின் பல மாவட்­டங்­க­ளிலும் ஏற்­பட்­டுள்ள வெள்ள நிலை­மை­களை பார்­வை­யிடும் நோக்கில் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு அநா­வ­சி­ய­மான பய­ணங்­களை மேற்­கொண்ட 18 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­யலாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தற்­போது வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­களில் 50 ஆயிரம் பொலிஸார் சேவையில் ஈடு­பட்­டுத்­தப்­பட்­டுள்­ளனர். சக­ல­ரதும் விடு­மு­றைகள் இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளன. அவ்­வாறான நிலை­யிலும் தற்­போது வரையில் எந்தவொரு திருட்டுச் சம்­ப­வமும் பதி­வா­க­வில்லை என்­பது மகிழ்ச்­சி­க்கு­ரி­ய­தாகும்.

பொலிஸ் உயிர்­பா­து­காப்பு பிரிவு அதி­கா­ரிகள் மேற்­கொண்ட செயற்­பா­டு­களின் பல­னாக தற்­போது வரையில் 123 உயிர்­களை காப்­பாற்ற முடிந்­துள்­ளதும் விசே­ட­மா­ன­தாகும். இவ்­வா­றான பாது­காப்புச் செயற்­பா­டுகள் முறை­யாக தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­பட்ட வண்­ணமே இருக்கும்.

இவ்­வா­றான நிலையில் அநா­வ­சி­ய­மான முறையில் மேற்­படி வெள்ள நிலை­மை­களை பார்­வை­யிடும் நோக்கில் பட­கு­களில் வரு­கின்­ற­வர்­க­ளினால் நாம் பல சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க நேரிட்­டுள்­ளது. 

தற்­போ­து­வ­ரையில் அவ்­வாறு பார்­வை ­யிட வருகை தந்­த­வர்­களில் 18 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். அதனால் மேற்­படி அனர்த்­தங்­களை பார்­வை­யிடும் நோக்கில் அநா­வசி­ய­மாக பய­ணங்­களை மேற்­கொள்­வதை தவிர்த்­துக்­கொள்­ளு­மாறு மக்­களை அறி­வு­றுத்­து கின்றோம்.

அத்­துடன் தற்­போ­தைய அனர்த்த காலத்தில் பொலிஸ் நிலையங்களின் தகவல் மையங்கள் அனைத்தும் தொடர்ந்தும் சிறப்பான சேவைகளை வழங்கிக்கொண் டுள்ளன. அதனால் திருட்டுச் செயல்களும் குறைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01