மோட்டார் பந்தய வீரர் ஆனந்த வெடிசிங்க கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நுவரெலியாவில் இடம்பெற்ற மோட்டார் பந்தயத்தின் போது, பலத்த காயமடைந்த ஆனந்த வெடிசிங்க, கோமா நிலையடைந்ததோடு உயிர்காக்கும் சாதன உதவியுடன் கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் அவரை மேலதிக சிகிச்சைக்காக ஜப்பானுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை அவரது மணவை மற்றும் நண்பர்கள் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.