அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தை கண்டிக்கும் திஸ்ஸ விதாரண 

Published By: Priyatharshan

29 May, 2017 | 05:19 PM
image

(எம்.ஆா்.எம்.வஸீம்)

அனர்த்தம் ஏற்படப்போவதை அறிந்தும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எந்த ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல் இருந்தது கண்டிக்கத்தக்கது என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அனர்த்தங்கள் ஏற்படும்போது அதற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்துக்கொள்ளும் பொருட்டே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அமைக்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தில் நான் விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சராக இருக்கும்போதே இது அமைக்கப்பட்டது.

ஆனால் நாட்டில் தற்போது இடம்பெற்றிருக்கும் சீரற்ற காலநிலை தொடர்பாக வளிமண்டளவியல் திணைக்களம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் அனர்த்த முகாமைத்துவ  நிலையம் அதுதொடர்பாக கவனயீனமாகவே இருந்துள்ளது.

 மேலும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களில் தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கு சா்தியம் இருக்கின்றது. அதனால் வெள்ளம் வடிந்தோடும் பிரதேசங்களில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு சுகாதார அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எனவே அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் தேவையான வைத்தியர்களை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கவும் சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00