இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டடிருந்த ஹெலிகொப்டருக்குள் கர்ப்பிணிப் பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளதாக இலங்கை விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்படடுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் கலவானையில் இருந்து இரத்தினபுரிக்கு இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டரில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுச்செல்கையில், குறித்த ஹெலிகொப்டருக்குள் இருந்த கர்ப்பிணிப்பெண்ணாருவர் குழந்தையை பிரசவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.