"பிர­பா­க­ரனால் விதைக்­கப்­பட்ட சிந்­த­னைகள் குறு­கிய காலத்தில் மறைந்­து­வி­டு­மென நம்­பு­வது முட்­டாள்­தனம்"

Published By: Raam

29 May, 2017 | 12:35 PM
image

வடக்கு, கிழக்கு பகு­தியில் பிர­பா­கரனின் காலத்தில் தற்­கொலை குண்­டு­தா­ரிகள் உரு­வாகும் வகை­யி­லான சிந்­த­னைகள் மக்­க­ளி­டத்தில் விதைக்­க­ப்பட்­டி­ருந்­தன. எனவே குறு­கிய காலத்தில் அந்த சிந்­த­னைகள் மறைந்­து­விடும் என்று கரு­தி செயற்­ப­டு­வ­தா­னது பார­தூ­ர­மான நிலை­மை­யாகும் என முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

நியூயோர்க் நகரம் போன்று ஒருவ­ரி­டத்­தி­லி­ருந்து மற்­றைய இடத்­தி­லி­ருப்­ப­வர்­களை கண்­கா­ணிக்கும் பாது­காப்பு முறை­மை­களை பின்­பற்றி வந்­த­மை­யி­னாலும் இரா­ணு­வத்­தி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட தேசிய பாது­காப்பின் பிர­கா­ர­மான செயற்­பா­டு­க­ளாலும்  எமது காலத்தில்  பொது­மக்­களின்  வாழ்க்­கையில் எந்த வித நெருக்­க­டி­களும் ஏற்­ப­ட­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். 

சிங்­கள ஊடகம் ஒன்­றுக்கு வழங்­கிய பேட்­டி­யொன்­றி­லேயே அவர் இந்த விடயங்­களை  சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.  அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, 

கேள்வி: யுத்தம் முடிந்து  8 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கி­யுள்­ளமை தொடர்பில்?

பதில்:  இன்று நாட்டில் சக­லரும் சுதந்­தி­ர­மான வாழ்க்­கையை ஆரம்­பித்து 8  வரு­டங்கள் ஆகின்­றன. நாட்டில் வவு­னி­யா­விற்கு அப்பால் உள்ள இடங்கள், கிழக்கு மாகா­ணத்தின் சில பகு­திகள் உள்­ளிட்ட எந்த ஒரு பகு­திக்கும் செல்ல முடி­யாத ஒரு காலம் இருந்­தது. நாட்டின் தலை­வர்­க­ளுக்கு கூட நாட்டில்  செல்ல முடி­யா­தி­ருந்த அந்த பாரா­தூ­ர­மான நிலைமை இன்று இல்லை   என்று நினைக்­கின்ற போது மகிழ்ச்­சி­யாக உள்­ளது.

கேள்வி:   மஹிந்த ராஜ­பக் ஷ கூட்டு எதி­ர­ணிக்கு சென்ற காலத்­தி­லி­ருந்து நாட்டின் தேசிய பாது­காப்பு கட்­ட­மைப்பு வலுக் குன்­றி­யுள்­ள­தாக எதி­ரணி குற்றம் சாட்­டு­கின்­றது. இருப்­பினும் அர­சாங்கம் தேசிய பாது­காப்பு வலு­வாக உள்­ளது என உறு­தி­யாக கூறு­கின்­றதே?

பதில்:  நாட்­டிற்கு நேர­வி­ருக்கும் அச்­சு­றுத்­த­லான நிலை­மைகள் பற்­றிய அறிந்­தி­ருக்க வேண்­டி­யது அவ­சியம். நாட்டின் தலை­வர்கள் கடந்த கால பிரச்­சி­னை­களைபோன்று புதிய பிரச்­சி­னைகள் தோன்­றாமல் இருப்­ப­தற்­கான வழி­மு­றைகள் பற்றி தலை­வர்கள் அறிந்­தி­ருக்­கா­விடின் அது பாரா­தூ­ர­மான நிலை­மை­யாக மாறி­விடும். கடந்த காலங்­களில் நான் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்த போது வடக்கு கிழக்கில் மீண்டும் ஒரு அபா­ய­க­ர­மான நிலைமை தோன்­றா­தி­ருப்­ப­தற்­கான வேலைத்­திட்டம் ஒன்றை முன்­னெ­டுத்­தி­ருந்தோம்.  அதனால் அப்­ப­குதி மக்­களின் இயல்பு வாழ்க்கை எந்த வகை­யிலும் பாதிக்­கப்­ப­ட­வில்லை.

கேள்வி:  இருப்­பினும் அப்­ப­குதி மக்கள் அதனை இரா­ணுவ ஆதிக்கம் என்­றல்­லவா கரு­தி­னார்கள்?

பதில்: அந்த கரு­துகோள் அவர்­க­ளுடை தனிப்­பட்ட தேவைக்கு அமை­வாக ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளப்­பட்­ட­தாகும். நாம் ஒரு­போதும் வீதித்­த­டை­களை போட்டு பாது­காப்பு செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கவில்லை. குறிப்­பாக எனது காலத்தில் வீதித்­தடை செயற்­பாடுகள் பூச்­சி­ய­மா­கவே இருந்­தன. அதேபோல் நாம் பாது­காப்பு தொடர்­பி­லான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் போது அந்தச் செயற்­பா­டுகள் ஒரு­போதும் பொது­மக்­க­ளுக்கு தெரியும் வகையில் அமைந்­தி­ருக்­கில்லை.

கேள்வி:  நீங்கள் அவ்­வாறு கூறி­னாலும் வடக்கு மக்கள் இன்றும் கூட இரா­ணுவ முகாம்­களை அகற்­றுங்கள் என்­றுதான் கோரு­கின்­றார்கள். மக்­க­ளுக்கு தெரி­யாமல்  பாது­காப்பு செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்தால் அவர் கள் ஏன் முகாம்­களை அகற்ற கோரு­கின்­றார்கள்? 

பதில்:  அந்த விவ­காரம் வேறு­பட்ட ஒரு நியா­ய­பத்­தி­ரத்தை அடிப்­ப­டை­யாக கொண்­ட­தாகும். நாம் முன்­னெ­டுத்த செயற்­பா­டு­களை உதா­ர­ணத்­துடன் கூறு­வ­தாயின்  அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நக­ரத்­தி­லி­ருந்து ஏனைய பிரந்­தி­யத்தில் உள்­ள­வர்­களின் நட­வ­டிக்கை எவ்­வாறு உள்­ளது என்று கண்­கா­ணிக்க முடியும். இந்தச் செயற்­பாடு சாதா­ரண மக்­களின் வாழ்க்கை சூழலை எந்த விதத்­திலும் பாதிக்­காது. அவர்­க­ளுக்கு உள, மற்றும் உடல் ரீதி­யி­லான பாதிப்­புக­ளையும் ஏற்­ப­டுத்­தாது. அவ்­வ­ாறான ஒரு முறை­மை­யையே நாங்கள் பின்­பற்­றினோம். எனவே இந்த பாது­காப்பு கட்­ட­மைப்­புக்­களை சிதைத்­து­விட்டால் அது எமக்கு பிரச்­சி­னை­யா­விடும்.

கேள்வி:  யுத்த வெற்றி நாளன்று கிளி­நொச்­சியில் பொலிஸ் வாகனம் மீது துப்­பா­க்கிச்­சூடு நடத்­தப்­பட்ட சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றது. அதனை ராஜ­பக் ஷ அணி புலி­களின் மீௌ­ழுச்சி என்றா பார்க்­கின்­றது? 

பதில்: அப்­படி கூறா­தீர்கள். எனது காலத்தில் கோபி என்ற ஒரு­வரை நாங்கள் கைது செய்­தி­ருந்தோம். ஒருமுறை மிதி­வண்டி ஒன்றில் வந்த நபர் ஒரு­வரை சோத­னை­யிட்ட போது அவ­ரி­டத்­தி­லி­ருந்து கிடைத்த கடிதம் ஒன்றை மைய­மாக கொண்­டுதான் கோபி என்­ப­வரை கைதுசெய்­தி­ருந் தோம். அதனால் பாது­காப்பு தரப்பில் உள்­ள­வர்­க­ளுக்கு கிடைக்கும் சிறு துரும்பும் கூட பெரிய ஆதா­ரங்­க­ளாக இருக்கும். எனவே பொலிஸ் வாகனம் மீதான தாக்­கு­தலை சாதா­ரண விடயம் என்று கரு­தா­தீர்கள். கொழும்பில் இவ்­வா­றான ஒரு சம்­பவம் நடந்தால் சாதா­ரண சம்­பவம் என்று கரு­தி­விட முடி­யா­தல்­லவா? அது­போன்று எந்த மாகா­ணத்தில் நடந்­தாலும் அது குறித்து தேடிப் பார்க்க வேண்டும்.

கேள்வி:  அவ்­வா­றான ஒரு அச்­சு­றுத்­த­லான சூழல் தோன்ற வேண்டும் என்­ப­துதான் ராஜ­பக் ஷ அணியின் வேண்­டுதல் என்று கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்: அவ்­வாறு வேண்­டுதல் செய்ய வேண்­டிய தேவை எமக்கு கிடை­யாது. காரணம் நாங்கள் யுத்­தத்­தினை முற்­றுப்­பெறச் செய்­த­வர்­க­ளாவோம். அவ்­வா­றி­ருக்­கின்ற போது அர­சாங்கம் மீண்டும் புலிகள் எழு­வ­தற்கு இடம்­கொ­டுக்­கு­மாயின் அது பாரதூ­ர­மான நிலை­மை­யாகும். நாட்டின் தலை­மைக்கு இந்த விடயம் குறித்து தெரிவு இல்லை என்­பது பார­தூ­ர­மான நிலை­மை­யாகும். நாட்­டிற்கு ஆபத்து என்­பது ஐ.எஸ். அமைப்பு உள்­ளிட்ட எந்த பக்­கத்­தி­லி­ருந்து வரக்­கூடும்.  எனவே அது தொடர்பில் அவ­தா­னத்­துடன் இருப்­பதே சிறந்­த­தாகும்.

கேள்வி:  வடக்கு முதல்வர் விக்­னேஸ்­வரன் வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை அகற்ற கோரு­கின்றார். மறு­மு­னையில் அர­சாங்கம் இரா­ணுவ முகாம்­களை அகற்ற மறுப்பு தெரி­விக்­கின்­றது. அவ்­வா­றாயின் அர­சாங்­கத்தின் பாதை சரி­யா­கத்­தானே உள்­ளது?

பதில்: இதற்கு முன்­னைய காலங்­களை பார்த்தால் குறிப்­பாக 1980 களிலும் கூட வடக்கில் இரா­ணுவ முகாம்கள் இருந்­தன. அதனுள் இரா­ணு­வமும் இருந்­தது. பலா­லியிலும், வட­ம­ராட்­சி­யிலும் இரா­ணுவ முகாம்கள் இவ்­வாறு இருந்­தாலும் அதனை சூழ புலி­களே இருந்­தார்கள். அங்­கி­ருந்து அடுத்த முகாம்­க­ளுக்கு கூட செல்ல முடி­யாத நிலையில் இரா­ணுவம்  இருந்­தது. மேலும் எமது நாடு 30 வரு­ட­கால யுத்­தத்­திற்கு முகம்­கொ­டுத்­தி­ருந்­தது. அவ்­வா­றி­ருக்­கின்­ற­போது பிர­பா­க­ரனால் விதைக்­கப்­பட்ட சிந்­த­னைகள் உள்ளன. குறு­கிய காலத்தில் அந்த சிந்­த­னை­களில் மாற்றம் ஏற்பட்டி­ருக்கும் என்று கரு­தி­விட முடி­யாது. பிர­பா­க­ரனின் காலத்தில் தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளாகும் அள­விற்கு மக்­களின் சிந்­த­னையில் மாற்றம் செய்­யப்­பட்­டி­ருந்­ததை மறந்­து­வி­டவும் முடி­யாது. அதனால் அவ்­வா­றான ஒரு நிலைமை மீண்டும் தோன்­றாது என்று நினைப்­பது முட்­டாள்­த­ன­மா­ன­தாகும்.

கேள்வி:  தற்­கா­லத்தில் முப்­ப­டை­யி­னரில் பலரும் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களின் பேரில் கைதா­கின்­றார்கள். அந்த நாட்­களில் பாது­காப்பு செய­லாளர் என்ற வகையில் நீங்கள் தானே அவற்­றுக்கு பொறுப்பு கூற வேண்­டி­யவர்? 

பதில்: நாட்டின் பாது­காப்­பிற்­காக தீவி­ர­வா­தத்­தினை ஒழித்­தது தவறு என்று கூற முடி­யாது. அவர்கள் தீவி­ர­வா­தத்­தினை முடக்கும் நோக்கில் மேற்­கொண்ட செயற்­பா­டு­களை தற்­கா­லத்தில் வன்­மு­றை­க­ளாக கருதி அவர்­களை கைதுசெய்­வது தேசத்­து­ரோகச் செய­லாகும். எவ்­வா­றா­யினும் இரா­ணு­வத்­தினர்  செய்த அனைத்து செயற்­பா­டு­க­ளையும் நான் பொறுப்­பேற்­றுக்­கொள்­கின்றேன்.

கேள்வி:  எனது கேள்வி யுத்­தத்தின் பேரில் குற்றம் இழைத்­த­வர்கள் பற்­றி­ய­தாகும்?

பதில்: இரா­ணுவ புல­னாய்வு பிரிவின் அதி­கா­ரிகள் யுத்தம் என்ற போர்­வையில் தவறு செய்­தி­ருந்தால் அவர்கள் தண்­டனைக்குரி­ய­வர்­க­ளாவர். இவர்­களை தண்­டிப்­ப­திலும் தவ­றில்லை. ஆனால் ஒரு தனிப்­பட்ட நபரால் செய்­யப்­பட்ட குற்றம் என்று கரு­தப்­பட வேண்டும். எனவே அவற்­றுக்கு நாம் பொறுப்புக் கூற முடி­யாது.

கேள்வி:  வேறு அதி­கா­ரத்­திலும் கொண்­ட­வர்­களின் கோரிக்­கைக்கு அமை­வாக குற்றம் செய்­தி­ருந்தால்?

பதில்: அவ்­வா­றான ஒரு நிலைமை அன்று இருக்­க­வில்லை. அவ்­வா­றான நிலைப்­பாடு காணப்­பட்­ட­தாக ஒரு கதையை உரு­வாக்கும் முயற்­சிகள் தற்­போது மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தொடர்புபடுத்­திக்­கொண்டு முன்­னெ­டுக்­கப்­பட்ட யுத்தம் என்­பதால் நாம் அனைத்து தமி­ழர்­க­ளையும் தீவி­ர­வா­திகள் என்று பார்க்­க­வில்லை. அதனால் தமிழ் மக்­கள வாழும் பகு­தி­களை இலக்கு வைத்து சோதனை நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் 10 பேரை கைது செய்­கின்ற போது 3 அப்­பா­விகள் சிக்­கி­யிருக்கக் கூடும் அதனை நாங்கள் பொறுப்­பேற்க முடி­யாது. உலக நாடு­களில் இந்த நடப்பு ஒன்றும் புதி­தல்­லவே. மேலும் 99 வீத­மான தீவி­ர­வா­திகள் தமி­ழர்­க­ளாக இருந்த போது நாங்கள் அம்­பாந்­தோட்­டையில் சென்று அவர்­களை  தேடி சோத­னை­யி­டு­வது பய­னற்­ற­தாகும்.

கேள்வி: . அவ்­வா­றாயின் தேசிய பாது­காப்பின் நிமித்தம் சற்று சட்­டத்­துக்கு முர­ணான செயற்­பா­டு­களும் இடம்­பெற்­றன என்­பதை நீங்கள் ஏற்­று­க்கொள்­கின்­றீர்­களா?

பதில்: தீவி­ர­வா­திகள் என்று வரு­கின்ற போது அவர்கள் சட்­டத்­தினை மதித்து செயற்­ப­டு­வார்­களா? அதனால் அவர்­க­ளுடன் தலையை தடவிப்பேசு­வதால் ஒன்றும் ஆகப்போவ ­தில்லை. அதனை தவறு என்று கூறு­வார்­க­ளாயின் நானும் குற்­ற­வாளி என்று ஒப்­புக்­கொள்ள தயா­ரா­கவே உள்ளேன்.

கேள்வி: அவ்­வா­றாயின்  நீதிக்­காக சட்­டத்தை மீற­வேண்டி ஏற்­படும் என்றா கூறு­கின்­றீர்கள்?

பதில்: மக்­களின் உயிர் பாது­காப்பின் நிமித்­தமும் தீவி­ர­வாதத்­தினை அழிக்கும் நோக்­கத்­திலும் முன்­­னெ­டுத்த செயற்­பா­டுகள் சட்­டத்­திற்கு அமை­வா­னவை என்­றுதான் நான் கூறுவேன். அதனால் தான் அப்­போ­தைய காலங்­களில் கொழும்பில் இருந்த விடு­தி­களில் தங்­கி­யி­ருந்­த­வர்­களை வவு­னி­யா­விற்கு அனுப்ப நேரிட்­டது, அதற்கு காரணம் தீவி­ர­வா­திகள் தங்­கி­யிருந்ததாகக் கூறப்­பட்ட விடு­தி­களில் அவர்கள் தங்­கி­யி­ருந்­த­மை­யாகும்.

கேள்வி:  அவ்­வா­றாயின் கொழும்பில் உள்ள விடு­தி­க ளில் இருந்­த­வர்கள் சக­லரும் தீவி­ர­வா­தி­களா?

பதில்:  அவ்­வா­றில்லை நாங்கள் மேற்படி விடுதிகளில் தங்கியிருந்தவர்களை வவுனியாவிற்கு அனுப்பிய போது நீதியரசர் சரத் நந்த சில்வா நாங்கள் செய்தது தவறான செயல் என்று தீர்ப்பளித்ததையடுத்து அவர்களுக்கு பஸ் ஒன்றில் ஏற்றிச் சென்று வவுனியாவில் இறக்கிவிடப்பட்ட சுமார்  300 பேரை     மீண்டும் அழைத்துவந்தோம். அதனால் நாங்கள் சட்டத்துக்கு முரணாக செயற்படவில்லை.

கேள்வி:  நீங்கள் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சுமுகமான பேச்சுவார்த்தையொன்றினை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகின்றதே?

பதில்:  இல்லை. நாங்கள் ஒருபோதும் சந்திக்கவில்லை. ஒரு வருடத்திற்கு முன் சந்தித்த போதும் அரசியல் பற்றி பேசவில்லை. வேறு சில விடயங்கள் பற்றியே நாங்கள் பேசினோம்.

கேள்வி:  மத்தியஸ்தமான ஒரு நபரான உங்களை பயன் படுத்திக்கொள்ளும் ஒரு முயற்சியில் அரசியல் தரப்புகள் இரண்டுமே ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றதே அதன் தன்மை எவ்வாறானது? 

பதில்: அவ்வாறான ஒரு முயற்சி உள்ளதா என்பதை நான் அறியவில்லை. என்னுடன் அது பற்றிய ஒருவரும் பேசவும் இல்லை. பலர் அது பற்றி பேசிக்கொள்கின்றார்கள் என்பதை மட்டும் அறிவேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13