நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளதுடன், காணமல் போனோரின் எண்ணிக்கை 104 ஆகவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மொத்தமாக 15 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 586 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 71 ஆயிரத்து 542 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை 18 ஆயிரத்து 652 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்து 236 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.