நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகில் தோட்டத்தில் உள்ள குடியிருப்பில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில்  இடம்பெற்றுள்ளது 

கடும் மழையின் காரணமாக, குடியிருப்பிற்கு அருகில் இருந்த மரம் முறிந்து வீட்டின் கூரை மீது விழுந்துள்ளது.

இதில் இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், இதில் வீடொன்றிலிருந்த வயோதிபப் பெண் உட்பட இரண்டு சிறுவர்களும் காயமடைந்துள்ளனர்.

 காயமடைந்த மூவரும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குடியிருப்பிலிருந்தவர்கள் உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.