முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் காலமானதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலி டுவிட்டர் கணக்கிலிருந்து டுவிட் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டு, உடனடியாக அந்த டுவிட்டர் கணக்கு முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவரும் பொலிஸார், போலி கணக்கில் டுவிட் பதிவு செய்த சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.