இயற்­கை­யுடன் தொடர்­பு­டைய தைத்­தி­ரு­நாளைக் கொண்­டா­ டு­வ­தா­னது இப்­பூ­வு­லகை மனிதன் வாழ்­வ ­தற்­கான சிறந்த தள­மாக மாற்­று­வ­தற்கு பங்க­ளிப்பு செய்­கி­றது.

ஆகவே இயற்­கையை புனி­த­மாக மதித்து சமூக நல்­லி­ணக்­கத்­துக்கும் சமூக முன்­னேற்­றத்­துக்கும் உதவும் பாரம்­ப­ரிய மர­பு­களை முன்­னெ­டுத்துச் செல்ல வேண்­டி­யது எம்­மீ­துள்ள பொறுப்­பாகும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

அவர் விடுத்­துள்ள தைத்­தி­ருநாள் செய்­தியில் மேலும் கூறி­யுள்­ள­தா­வது; இயற்­கைக்கு மனி­தர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான வலி­மை­யான உறவைக் குறிக்கும் ஒரு உயர்ந்த பண்­டி­கையே தைப்­பொங்கல் பண்­டி­கை­யாகும். மக்கள் தம்மைப் போசிக்கும் இயற்கை அன்­னைக்கும் இயற்­கையின் தனிப்­பெரும் சக்­தி­யான சூரிய பக­வா­னுக்கும் நன்றி செலுத்­து­வதைக் குறித்து நிற்­பதன் கார­ண­மாக இப்­பண்­டிகை பெரு­மி­தத்­துடன் கொண்­டா­டப்­ப­டு­கி­றது.

மானிடப் பரி­ணாமக் காலம் முதல் விவ­சாய சமூ­கத்­தினர் இத்­த­கைய பண்­டிகை நிகழ்­வு­களை ஐக்­கியம் மற்றும் பரஸ்­பர மதிப்­பு­ணர்­வு­டனும் பொது சமூகப் பெறு­மா­னங்­களைப் பேணியும் கொண்­டாடி வந்­துள்­ளனர். இயற்­கை­யுடன் தொடர்­பு­டைய இத்­த­கைய பண்­டி­கை­களைக் கொண்­டா­டு­வது இப்­பூ­வு­லகை மனிதன் வாழ்­வ­தற்­கான ஒரு சிறந்த இட­மாக ஆக்­கு­வ­தற்கு பெரிதும் பங்­க­ளிப்புச் செய்­கி­றது. இயற்­கையை புனி­த­மாக மதித்து, சமூக நல்­லி­ணக்­கத்­திற்கு சமூக முன்­னேற்­றத்­திற்கு உதவும் பாரம்­ப­ரிய மர­பு­களை முன்­னெ­டுத்துச் செல்ல வேண்­டி­யது இன்று எம்­மீ­துள்ள பொறுப்­பாகும்.

தேசிய அடை­யா­ளமும் மாசற்ற கலா­சார மர­பு­ரி­மை­களும் தைப்­பொங்கல் போன்ற இத்­த­கைய பண்­டி­கை­களில் மிகச் சிறப்­பாகப் பிர­தி­ப­லிக்­கின்­றன. ஆயிரம் வரு­டங்­க­ளுக்கும் மேலாக இப்­பண்­டிகை எத்­த­கைய மாற்­றங்­களும் திரி­வு­க­ளு­மின்றி பழங்­காலப் பண்­பு­கெ­டாமல் தொடர்ந்­தி­ருப்­பது இதன் மிகப் பெரும் சிறப்­பாகும்.

இன்­றைய தினம் பொங்கிப் பிர­வா­கிக்கும் பாற்­கு­டத்தைப் போன்று ஒருவர் மற்­றவர் மீதான மானிட அன்பும் எம்மக்களின் உள்ளங்களில் பொங்கிப் பிரவாகிக்கவும், ஏற்றப்படும் ஒளி விளக்குகள் இருளை நீக்கி உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கவும் எனது பிரார்த்தனைகள்