ரத்துபஸ்வெல ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்த கட்டளையிட்டதாக கூறப்படும் பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்வதனவை எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குமூலமளிப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிய பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்வதனவை குற்றப்புலானாய்வு திணைக்களத்தினர் இன்று கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்தே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ரத்துபஸ்வெல வெலிவேரிய சந்தியில் சுத்தமான குடிநீர் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதனால் மூவர் உயிரிழந்தனர்.

இதில் இருவர் துப்பாக்கிசூட்டிலும் ஒருவர் தட்டையான ஆயுதத்தால் தாக்கப்பட்டும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.