(எம்.ஆா்.எம்.வஸீம்)

திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்க யுத்தமுகாம் அமைப்பது உறுதியாகியுள்ளது. சீனாவை அச்சுறுத்துவதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் இந்த திட்டத்துக்கு அரசாங்கமும் பங்காளியாக செயற்படுவது வீண் பிரச்சினையை ஏற்படுத்திவிடும் என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

லங்கா சமசமாஜ கட்சி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.