அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிலேன் மெக்ஸ்வெல் துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவரது கழுத்தில் பந்து தாக்கியுள்ளது.

இதில் சற்று நிலைத்தடுமாறிய மெக்ஸ்வெல் தரையில் விழுந்துள்ளார்.

மைதானத்தில் இருந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மெக்ஸ்வெலை ஓடிவந்து கவனிக்க, அதிஷ்டவசமாக அவருக்கு எவ்வித பாரிய உபாதைகளும் ஏற்படவில்லை.

எனினும் பந்து தாக்கியதற்கு பிறகு மெக்ஸ்வெல் அவரது அறைக்கு சென்றுவிட்டார்.

இதனால் அவர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ள நிலையில், “அவருக்கு பெரிதான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.  அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது” என ஆஸி. அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஊடகவியலாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதே தினத்தில் வலைப்பயிற்சியின் போது ஆஸி. வீரர் மெத்தியுவ் வேடிற்கும் அபாயகரமான முறையில் பந்து ஹெல்மட்டில் தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.