தாய் இறந்தது தெரியாத ஒன்றரை வயதுக் குழந்தை தாய்ப்பால் அருந்திய காட்சி காண்போரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் இரயில் பாதைக்கு அருகில் பெண்ணொருவர் விழுந்து கிடந்ததை ரயில்வே தொழிலாளர்கள் சிலர் கண்டனர். 

அருகில் சென்று பார்த்தபோது, பெண்ணொருவர் இறந்து கிடப்பதையும், அவரருகில் அமர்ந்திருந்த அவரது குழந்தை, அந்தப் பெண் இறந்தது தெரியாமல் தாய்ப்பால் அருந்தியவாறு இருந்ததையும் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அங்கு வந்த பொலிஸார் பெண்ணின் உடலை உடற்கூறுப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன், அந்தக் குழந்தையை பராமரிப்பு இல்லம் ஒன்றுக்கும் அனுப்பி வைத்தனர்.