பிரித்தானியா, மான்செஸ்டர் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய மூன்று பேரை இங்கிலாந்து பொலிஸார் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

பிரித்தானியா, மான்செஸ்டர் பகுதியில் சக்தி வாய்ந்த தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இசை நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். .எஸ் தீவிரவாதிகளால் இந்த வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலில் ஈடுபட்டது 22 வயதான சல்மான் அபேதி என்பவர் என்றும், இவர் லிபியாவில் இருந்து சிறுவயதில் அகதியாக இங்கிலாந்து வந்தவர் என்றும் இங்கிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் பிரித்தானியப் பொலிஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர்.

 

இந்நிலையில், மான்செஸ்டர் நகரில் இதே போன்று மற்றொரு தாக்குதல் நடத்தப்படலாம் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.