தமிழ் தேசிய கூட்­­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­­சிங்­கத்தின் படு­கொலை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட 5 ஆவது  சந்­தேக நபரை எதிர்­வரும் ஜூன் மாதம் 7 திக­தி­வரை விளக்­­­றி­யலில் வைக்குமாறு மட்­டக்­­ளப்பு நீதிவான் எம்.கணே­­ராசா நேற்று புதன்­கி­ழமை உத்­­­விட்டார்.

கடந்த 2005ஆம் ஆண்டு மட்­டக்­­ளப்பு புனித மரியாள் இணைப் பேரா­­யத்தில் நடை­பெற்ற நத்தார் நள்­ளி­ரவு ஆரா­­னையில் கலந்­து­கொண்­டி­ருந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­­சிங்கம் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டி­ருந்தார்.

இந்தச் சம்­பவம் தொடர்பில் கடந்த 11.10.2015 அன்று சிவ­நே­­துரை சந்­தி­­காந்தன் கைது செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில்  இது தொடர்பில்  மேலும் 3 பேர் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தில் ஆஜர்­­டுத்­தப்­பட்டு  விளக்­­­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவ்வழக்கு விசா­ரணை மட்­டக்­­ளப்பு மேல் நீதி­மன்­றத்தில் இடம் பெற்று வரும் நிலையில் இந்தப் படு­கொலைச் சம்­பவம் தொடர்பில் இன்னும் 3 சந்­தேக நபர்கள் கைது­செய்­யப்­­டாமல் உள்­­தா­கவும் அவர்­களைக் கைது­செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர்­­டுத்­து­­தற்கு கால அவ­காசம் வேண்டும் எனவும் மன்­றத்தில் குற்­றப்­பு­­னாய்வுப் பிரி­வினர் கோரிக்கை விடுத்­தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் செவ்­வாய்­க்கி­ழமை இக் கொலையில் தொடர்­பு­டைய சந்தேகத்தின்பேரில் வெலி­க்கந்­தையைச் சேர்ந்­­வரும் இரா­ணு­வத்தில் முன்னர் கட­மை­யாற்­றியவருமாகிய 30 வய­து­டைய மது­சங்க அல்­லது வினோத் என அழைக்­கப்­­டு­­வரை குற்­றப்­பு­­னாய்வுப் பிரி­வினர் கைது செய்து நேற்று புதன்­கி­ழமை மட்­டக்­­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதிவான் எம்.கணே­­ராசா முன்­னி­லையில் ஆஜர்­­டுத்­திய போது அவரை ஜூன் மாதம் 7 திக­தி­வரை விளக்­­­றி­யலில் வைக்குமாறு உத்­­­விட்டார்.

இதே­வேளை இக்கொலை தொடர்பில் முன்னாள் கிழக்கு முத­­மைச்­சரும் மாகாண சபை உறுப்­பி­னரும் தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்சித்தலை­­ரு­மான சிவ­நே­­துரை சந்­தி­­காந்தன், தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்­சியின் முன்னாள் தேசிய அமைப்­பா­ளரும் முன்னாள் மாகா­­சபை உறுப்­பி­­ரு­மான பிரதீப் மாஸ்டர் என அழைக்­கப்­படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.