ஆசிய இளையோர் தடகளப் போட்டிகள் நிறைவு : இலங்கைக்கு 17ஆவது இடம்

Published By: Priyatharshan

25 May, 2017 | 10:55 AM
image

தாய்­லாந்து நாட்டின் தலை­நகர் பாங்கொக் நகரில் நடை­பெற்­று­வந்த 2-வது ஆசிய இளையோர் தட­கள சம்­பி­யன்ஷிப் போட்டித் தொடர் நேற்று நிறை­­டைந்­தது.

இந்தத் தொடரின் பதக்கப் பட்­டி­யலின் அடிப்­­டையில் சீனா முத­லி­டத்தைப் பிடித்­துள்­ளது. 16 தங்கம், 9 வெள்ளிப் பதக்­கங்கள் மற்றும் 5 வெண்­கலப் பதக்­கங்­களை சீனா வென்­றுள்­ளது.

இந்தத் தொடரில் இரண்­டா­மி­டத்தைப் பிடித்­துள்ள சீன தைபே அணி 6 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்­­லப்­­தக்­கங்களை வென்­றுள்­ளது. அதேபோல் இந்த தொடரில் இந்­தியா 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்­கலப் பதக்கங்களுடன் மொத்தம் 14 பதக்­கங்கள் பெற்று பட்­டி­யலில் 3-வது இடத்தை பிடித்­தது.

இலங்கை அணி ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்­­லப்­­தக்­கத்தை மாத்­திரம் பெற்று 17ஆவது இடத்தைப் பிடித்­தது.

இந்தத் தொடரில் ஆண்­­ளுக்­கான 400 மீற்றர் சட்­­வேலி ஓட்டப் போட்­டியில் நவோத்­திய சங்­கல்ப வெண்­கலப் பதக்­கத்தை வென்றார். இவர் பந்­தயத் தூரத்தை 53.8 வினா­டி­களில் கடந்தார். அதேபோல் ஆண்­­ளுக்­கான 800 மீற்றர் ஓட்டப்  போட்டியில் ஹர்ஸ கருணாரத்ன வெள்ளிப் பதக்கத்தை இலங்கைக்கு வென்று கொடுத்தார்.

2000 மீற்றர் தடை­தாண்டி ஓடும் போட்­டியில் பங்­கு­பற்­­வி­ருந்த இலங்கை வீராங்­கனை ஹஷ்­மி­கா­வுக்கு போட்­டியில் கலந்­து­கொள்­­தற்­கான வாய்ப்பை போட்டி அதி­கா­ரிகள் மறுத்­­தை­­டுத்து மற்­றொரு பதக்­கத்தை வெல்லும் வாய்ப்பை இலங்கை தவ­­விட்­டது.

ஒரே வீராங்­கனை இரு போட்­டி­­ளிலும் கலந்­து­கொள்ள முடி­யாது என்­­தனை இலங்கை அணி அதி­கா­ரிகள் தெரிந்­தி­ருக்­கா­ததால் ஹஷ்­மி­கா­வுக்கு இரண்டு போட்­டி­­ளிலும் பங்­கு­பற்றும் வாய்ப்பு பறி­போ­னமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35