நோர்வேயின் பின்னணியுடனேயே ஞானசார தேரர் குழப்பங்களை ஏற்படுத்துகிறார் : தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

Published By: Priyatharshan

25 May, 2017 | 10:15 AM
image

நோர்­வேயின் பின்­­ணி­யுட­னேயே ஞான­சார தேரர் மத­வா­தத்தை நாட்டில் ஏற்­­டுத்திக் குழப்­பங்­களை ஏற்­­டுத்­து­கிறார் எனக் குற்­றஞ்­சாட்டும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் அரச சார்­பற்ற நிறு­­னங்­களும் இதற்கு துணை­போ­கின்­றன என்றும் குற்­றம்­சாட்­டி­யது.

இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய  இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்;

நாட்டில் அர­சியல் ஸ்திர­மில்லா நிலை­மையை ஏற்­­டுத்தி சிங்­களமுஸ்லிம் மக்­­ளி­டையே மோதல்­களை ஏற்­­டுத்தும் தேவை நோர்வே உட்­பட பல மேலைத்­தேய நாடு­­ளுக்கு தேவை­யா­­வுள்­ளது. அவ்­வா­றான ஒரு நிலை­மையை ஏற்­­டுத்­தி­னால்தான் நாட்டைப் பிரித்து தனித் தமி­ழீ­ழத்தை ஏற்­­டுத்தும் முயற்­சிகள் வெற்­றி­பெறும். இதற்கு முன்­னரும் நோர்வே இலங்கை பிரச்­சி­னையில் நேர­டி­யாக தலை­யிட்டு குழப்­பங்­களை ஏற்­­டுத்­தி­யது. இதன் பின்­­ணியில் சர்­­தேச அரச சார்­பற்ற நிறு­­னங்­களும்  இயங்­கின.

கடந்த காலங்­களின் முயற்­சிகள் தோல்வி கண்­டதால் இவர்கள் மீண்டும் தமது வேலையை ஆரம்­பித்­துள்­ளனர். அதற்­காக ஞான­சார தேரரின் பொது­­­சே­னாவை பயன்­­டுத்­து­கின்­றனர். ஞான­சார தேரர் மூலம் நாட்­டுக்குள் சிங்­களமுஸ்லிம் மோதல்­களை ஏற்­­டுத்தி குழப்­­­­மான சூழ்­நி­லையை ஏற்­­டுத்த முயற்­சிக்­கின்­றனர்.

அதன் செயல்­களே தற்­போது நாட்டில் அரங்­கே­று­கின்­றன. அரச சார்­பற்ற நிறு­­னங்­களை கட்­டுப்­­டுத்த வேண்டும்.இந்­தி­யாவில் அரச சார்­பற்ற நிறு­­னங்­­ளுக்கு கட்­டுப்­பா­டுகள் உள்­ளன. ஆனால் இலங்­கையில் அரச சார்­பற்ற நிறு­­னங்­­ளுக்கு கட்­டுப்­பா­டுகள் இல்லை. ஏனென்றால் இன்­றைய ஆட்­சியை ஏற்­­டுத்­தி­­வர்கள் அவர்­களே ஆகும்.

எனவே இன்­றைய ஆட்­சியில் அரச சார்­பற்ற நிறு­­னங்கள் தமக்கு தேவை­யான விதத்தில் இயங்­கு­கின்­றன. இது நாட்டில் பயங்­­­மான சூழ்­நி­லை­களைத் தோற்­று­விக்கும். கடந்த முப்­பது வரு­டங்­­ளுக்கு மேலாக நாட்டில் இரத்த ஆறு ஓடி­யது. இனங்­­ளுக்கு இடையே பிரச்­சி­னைகள் தலை­தூக்கிக் காணப்­பட்­டன.

அந்­நிலை நாட்டில் மீண்டும் ஏற்­­­லா­காது. அவ்­வாறு ஏற்­­டு­வது சாபமாகும். எனவே ஞானசார தேரரின் மதவாதத்திற்கு  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அடிப்படை வாதத்தை அடிப்படைவாதத்தால் தோல்வியடையச் செய்ய முடியாது. அடிப்படை வாதத்தை அஹிம்சை மூலமே தோல்வியடையச் செய்ய முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59