பிலிப்பைன்ஸில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அபு சய்யாப் தீவிரவாத குழுவினருடனான சண்டை அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ளதனால், குறித்த யுத்த பதற்றம் நிலவும் மின்டானோ தீவுக் கூட்டத்தில் அவசரகால முறையில் இராணுவ ஆட்சியை அமுல் படுத்துவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டெர்ட்டே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் பௌத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து பரவலாக வாழும் நிலையில், தனி இஸ்லாமிய விதிகளுடனான ஆட்சியை ஏற்படுத்தக்கோரி, அபு சய்யாப் தீவிரவாதிகள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு சுற்றுலா வரும் பயணிகளை கடத்தி சென்று பிணைத்தொகையை அறவிட்டு வருவதோடு, பணம் செலுத்தாதோரை கொடூரமாக கொலைசெய்தும் வருகின்றனர்.

இந்நிலையில்  ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அபு சய்யாப் தீவிரவாதிகளை, முழுமையாக அழிப்பதற்கு அந்நாட்டு இராணுவத்தினருக்கு ரோட்ரிகோ டுட்டெர்ட்டே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த சிலவரங்களாகவே தீவிரவாதிகளை அழிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வந்தநிலையில், இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் மின்டானோ தீவுக் கூட்டத்தின் மாராவி நகரில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகளவு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது ஜனாதிபதி ரோட்ரிகோ, ரஷ்யாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் இருப்பதனால், மின்டோனா தீவுக்கூட்டத்தில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தி, தீவிரவாதிகளை அழிக்குமாறு உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

அத்தோடு அவரின் ரஷ்ய விஜயத்தை பாதியிலேயே முடித்துள்ள ரோட்ரிகோ, மின்டோனா தீவு மக்கள், பிலிப்பைன்ஸ் இராணுவத்தினர் அபு சய்யாப் தீவிரவாதிகளை அளிக்கும் வரை, இராணுவ ஆட்சியை ஏற்றுக்கொள்ளவேண்டுமெனவும், அவர்களை அழிப்பதற்கு ஒருமாதம் முதல் ஒரு வருடம் வரையிலான காலங்கள் எடுக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று நடந்த தாக்குதலில் இரண்டு பிலிபைஸ் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாகவும், மாராவி நகரில் சுமார் 2 இலட்சம் இஸ்லாமிய மக்கள் சிக்குண்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.