(லியோ நிரோஷ தர்ஷன்)

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் உறுதியளித்த தேசிய பொறிமுறையை அரசாங்கம் மிக விரைவில் அறிவிக்கும் என அரச நிறுவன மற்றும் அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிரான் விக்ரமரத்ன தெரிவித்தார். 

இதேவேளை, இலங்கையின் அனைத்து துறைசார் மேம்பாட்டிற்கு பிரித்தானியாவினால் கிடைக்கப்பெறும் ஒத்துழைப்புகள் பாராட்டுக்குறியது எனவும் அவர் குறிப்பிட்டார்.

உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய  வெளியுறவு அமைச்சர் ஹியூகோ ஸ்வையார்  இன்று அந்நாட்டு வர்த்தக சமூகத்தை சந்தித்தார். 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் ஹிரான் விக்ரமரத்ன மேற்கண்டவாறு கூறினார்.