அமெரிக்க ஜனாதிபதியின் ‘அமெரிக்காவுக்கு முதலிடம்’ திட்டத்தில், இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதும் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு அரச திணைக்கள ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

எதிர்வரும் நிதியாண்டில் அரச திணைக்களம் மற்றும் சர்வதேச அபிவிருத்தி நிதியத்துக்கு 37.6 பில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதில், நாட்டு மக்களின் மேன்மைக்கான திட்டங்களுக்கும், தேசிய பாதுகாப்புக்கும், எல்லை காப்பு நடவடிக்கைகளுக்கும், அமெரிக்க பொருளாதாரத் திட்டங்களுக்கும் பெருந்தொகை செலவிடப்படவுள்ளது.

இதில் சுமார் 29 இலட்சம் டொலர்கள் இலங்கையின் அபிவிருத்திக்காகவும் வழங்கப்படவுள்ளது.