தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

சந்தையில் அரிசியின் விலை வேகமாக அதிகரித்து வருவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இதன்போது, மக்களின் சுமையைக் குறைக்கும் அதேநேரம், உள்நாட்டு விவசாயிகள் பாதிக்காத வகையில் தனியார் நிறுவனங்கள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் அரிசியின் அளவை அமைச்சரவையின் உப குழுவே தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.