எப்ளாஸ்டிரிக் அனிமீயா எச்சரிக்கை..!

Published By: Robert

24 May, 2017 | 11:22 AM
image

வளமை குறைந்து நலிந்த நிலையில் இருக்கும் சிவப்பு அணுக்கள், தேவையான அளவிற்கு பிராண வாயுவை திசுக்களுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலைக்குத்தான் அனிமீயா என்றும், இரத்தசோகை என்றும் குறிப்பிடுகிறோம்.

குருதியில் இருக்கும் ப்ளாஸ்மா, சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்கள், சத்துப்பொருள்கள், விற்றமின்கள் என பல இருந்தாலும், இந்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எலும்பு மஜ்ஜை. ஒருவர் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தால், அவரின் குருதியில் ஹீமோகுளோபின் அளவு இயல்பை விட குறைவாகவே காணப்படும். இந்த நிலையில் அவர் மருத்துவரிடம் காண்பித்து, ஆலோசனை பெறவில்லை எனில், அவரின் உடல் நிலை மேலும் மோசமடையக்கூடும். அதாவது அவரின் குருதியில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடிய சிவப்பு அணுக்களின் உற்பத்தி பலவீனமடையும். இது போன்ற தருணத்தில் எளிய இரத்த பரிசோதனை மூலம் எமக்கு எம்மாதிரியான இரத்த சோகை ஏற்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். அதனைத் தொடர்ந்து அதற்குரிய சிகிச்சை எடுத்து குருதியின் ஹீமோகுளோபினின் அளவை அதிகரித்துக்கொள்ளவேண்டும்.

இரும்பு சத்து குறைவால் ஏற்படும் இரத்த சோகை, விற்றமின் குறைபாட்டில் ஏற்படும் இரத்த சோகை, நீண்ட கால நோய்களின் காரணமாக ஏற்படும் இரத்த சோகை, ஏப்லாஸ்டிக் அனிமீயா, எலும்பு மஜ்ஜை நோயால் உருவாகும் இரத்த சோகை, ஹீமோலைக் அனிமீயா மற்றும் சிக்கில் செல் அனிமீயா என இரத்தசோகைகளில் பல வகை இருக்கிறது.

இவற்றில் இரும்பு சத்து குறைவால் வரும் அனிமீயா தான் ஐந்தில் ஒருவருக்கு ஏற்படுகிறது என்றும், அதிலும் குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. எலும்பு மஜ்ஜை ஹீமோகுளோபினை உற்பத்தி செய்ய இரும்பு சத்து மிகவும் அவசியம். ஒவ்வொரு முறையும் சிவப்பு அணுக்கள் தன்னுடைய வாழ்நாளான 100 முதல் 120 நாட்கள் வரை இருக்கும் போது, பெண்களுக்கு எற்படும் மாதவிடாயின் போது வெளியாகும் இரத்தத்தாலும் இவை வெளியேறுகிறது. அதே சமயத்தில் பெண்களுக்கு குடல் புண் மற்றும் புற்று நோய் ஏற்பட்டிருக்கும் போது, அந்த சமயத்தில் வெளியாகும் இரத்தத்தாலும் இரும்பு சத்து குறையத் தொடங்குகிறது. இரும்பு சத்து மிகுந்த உணவை எடுத்துக்கொள்ளாததாலும் இரத்த சோகை ஏற்படுகிறது. பெண்கள் கருவுற்றிருக்கும் காலகட்டத்தில் வயிற்றில் வளரும் சிசு, குருதியில் உள்ள இரும்பு சத்தை எடுத்துக்கொள்வதாலும் கூட இத்தகைய இரத்த சோகை ஏற்படுகிறது.

அதே போல் விற்றமின் குறைபாட்டால் கூட அனிமீயா ஏற்படுகிறது. வலுவான சிவப்பணுக்கள் உற்பத்தியாகவேண்டுமெனில் போலேட் பி 12 விற்றமின்கள் அவசியம் தேவை. உணவின் மூலமாகவே இவை கிடைக்கின்றன. சிறுகுடலில் உறிஞ்சப்படும் இவ்வகை விற்றமின்கள், குடல் நோயால் பாதிக்கப்பட்டால் இவை உற்பத்தியாகாது. இதனால் இவ்வகை அனிமீயா ஏற்படுகிறது.

அதே போல் நீண்டகால நோய்களால் கூட அனிமீயா ஏற்படும். அதாவது புற்றுநோய், ரூமாடாய்ட் ஆர்த்ரைட்டீஸ் எனப்படும் எலும்பு மூட்டு பாதிப்பு, க்ரோன்ஸ் எனப்படும் குடல் சுணக்க நோய், காச நோய் ஆகியவற்றால் சிவப்பு அணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படுகின்றன. ஒரு சிலருக்கு மேற்கண்ட நோய்களுக்கான வீரியமிக்க மருந்துகளை உட்கொள்ளும் போது பின்விளைவாகவும் இவ்வகையான அனிமீயா ஏற்படுகின்றன.

தொடர்ந்து சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை ஒரு கட்டத்தில் தன் சக்தியை இழந்துவிடும். இந்த நிலைக்குத்தான் எப்ளாஸ்டிக் அனிமீயா என்று பெயர். இவ்வகை இரத்த சோகை ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். புற்றுநோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது ஒரு சிலருக்கு இது நிகழக்கூடும். ஒருசிலருக்கு ஓட்டோ இம்யூன் எனப்படும் உடலே தனக்குதானே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ளும். அதன் போதும் இவ்வகையான அனிமீயா ஏற்படலாம். மேலும் பல வகையான அனிமீயாக்கள் இருக்கின்றன. அடுத்த முறை உங்களுக்கு சோர்வு ஏற்பட்டால், அவை தொடர்ந்தால் உடனே சிறிய அளவில் இரத்த பரிசோதனை செய்து, அதில் உங்களின் ஹீமோகுளோபின் அளவை கேட்டு, பார்த்துக் கொண்டு, அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

Dr. பிரேம்சங்கர்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29