அமெ­ரிக்­காவைச் சேர்ந்த முன்னாள் மோட்­டோ­ஜிபி சம்­பி­ய­னான மோட்டார் பந்­தய வீரர் நிக்கி ஹேடன் சாலை விபத்தில் உயி­ரி­ழந்தார். 

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் பந்­தய வீரர் நிக்கி ஹேடன், அவ­ருக்கு வயது 35. அவர் 2006ஆ-ம் ஆண்டின் மோட்­டோ­ஜிபி சம்­பியன் பட்­டத்தை வென்றவராவார். 

அவர் கடந்த ஐந்து தினங்­க­ளுக்கு முன்னர் இத்­தாலி நாட்டில் விபத்­துக்­குள்­ளானார். கடந்த மே 17ஆ-ம் திகதி நிக்கி ஹேடன் இத்­தாலி நாட்டின் ரிமினி கடற்­க­ரையில் சைக்­கிளில் சென்று கொண்­டி­ருந்த போது திடீ­ரென அவர்­மீது ஒரு கார் மோதி­யது. அந்த விபத்தில் பலத்த காய­ம­டைந்த அவர் மௌரி­ஸியோ புஃப­லானி என்ற மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டார். 

மருத்­து­வ­ம­னையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டார். நிக்கி ஹேடனின் பெரு­மூளைப் பகுதி கடு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ளது என்று மருத்­து­வ­மனை நிர்­வாகம் தெரி­வித்­தி­ருந்­தது. 

இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த ஹேடன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.