தெஹிவளை - படோவிட்ட கால்வாயிலிருந்து  ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 57 வயதுடைய வர்த்தகர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.