பிரபல ஜேம்ஸ் பொண்ட் நடிகர் ரொஜர் மூர் தனது 89வது வயதில் சுவிட்ஸர்லாந்தில் இன்று மரணமானார்.

பிரபல நாவலாசிரியர் அகதா கிறிஸ்டியின் புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரமான ஜேம்ஸ் பொண்ட் பாத்திரத்தில் ஏழு படங்களில் நடித்தவர். ‘லிவ் எண்ட் லெட் டை‘ மற்றும் ‘எ வ்யூ டு கில்’ ஆகிய படங்கள் அவரைப் புகழின் உச்சிக்கே இட்டுச் சென்றன.

காதல் மற்றும் சண்டைக் காட்சிகளில் அபார திறமை காட்டிய ரொஜர் மூர் நகைச்சுவை உணர்வு மிக்கவர்.

அவரது நடிப்புத் திறமையைப் பாராட்டி அவருக்கு சேர் பட்டம் வழங்கப்பட்டிருந்தது. அண்மைக் காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமானார்.