வெயாங்கொட - குரிகொடுவ பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில் காபைட் தாங்கியொன்று வெடித்து சிதறியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை தொழிற்சாலையிலிருந்த காபைட் தாங்கி ஒன்று வெடித்ததில் படுகாயமடைந்த நபர், வதுபிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குரிகொடுவ பகுதியைச் சேர்ந்த 65 வயதானவர் என தெரியவந்துள்ளது.

சடலம் தற்போது வதுபிடிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வெயாங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.