வேடிக்கை பார்க்க வந்த சிறுமியை கடற்சிங்கம் ஒன்று பிடித்து இழுத்து நீரில் வீழ்த்திய சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது.

கனடாவின் ஸ்டீபன்சன் நகரில் உள்ள கடல்வாழ் உயிரினங்களின் சரணாலயம் ஒன்றுக்கு வழக்கம்போல் பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர்.

அதன் சிறு ஏரி ஒன்றில் பராமரிக்கப்பட்டுவந்த கடற்சிங்கம் ஒன்றை பார்வையாளர்கள் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது, பார்வையாளர்களை நெருங்கி வந்த அந்த கடற்சிங்கம், திடீரென மேலெழுந்து, மேலே அமர்ந்திருந்த சிறுமியொருத்தியை ‘சரேல்’ என நீருக்குள் பிடித்து இழுத்துச் சென்றது.

அந்தக் கணமே பார்வையாளர்களுள் ஒருவர் துணிச்சலுடன் நீருக்குள் பாய்ந்து ஓரிரு நொடிகளில் அச்சிறுமியை எந்தக் காயமும் இன்றி மீட்டு வந்தார்.

இச்சம்பவம் பார்வையாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.