(லியோ நிரோஷ தர்ஷன்)

பிரித்தானியாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மான்செஸ்டரில் நேற்று இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 50 மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் கவலையை அளிப்பதாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலன்ணே தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்வதாகத் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சிறப்பு இசை நிகழ்ச்சி நடைப்பெற்ற நிலையில் அதனை பார்வையிடுவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியிருந்தனர். இந்த சந்தர்ப்பத்திலேயே குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு அனர்த்தம் காரணமாக அங்கு வாழும் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் எவரும் உயிரிழந்ததாக இதுவரை எந்த தகவல்களும் பதிவாகவில்லை என இலங்கை வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.