காலி - மினுவன்தெனிய பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 12-துளை துப்பாக்கியினை வைத்திருந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நேற்று இரவு விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் 37 வயதானவர் எனவும், அவரை இன்று காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.