த ஓர்கிட் தொடர்மனையின் - 2 ஆம் மாதிரி தற்போது பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

நவீன வாழ்க்கை பாணியை அனுபவிப்பதற்காக இந்த தொடர்மனை தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிவாசி டிவலப்பர்ஸ் முன்னணி நிர்மாண நிறுவனத்தின் மூலமாக நிர்மாணிக்கப்படும் இந்த தொடர்மனை, 160 அலகுகளை கொண்டிருப்பதுடன் 12 அடுக்குகளில் அமைந்திருக்கும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பமாகிய நிர்மாண செயற்பாடுகள், 2018 மார்ச் மாதமளவில் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கட்டம் அதன் தாய் நிறுவனமான புகழ்பெற்ற ஒப்பந்த நிறுவனமான International Construction Consortium Ltd (ICC) உடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், இந்த தொடர்மனையின் அலகுகள் துரித கதியில் விற்பனையாகி வருவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 56சதவீதமான தொடர்மனைகள் இன்றுவரை விற்பனையாகியுள்ளதுடன் வைத்தியர்கள், சுகாதாரத்துறை நிபுணர்கள் மத்தியில் புகழ்பெற்றுள்ளது. இந்த பிரதேசத்தில் பல வைத்தியசாலைகள் மற்றும் அலுவலகங்கள் காணப்படுவதால் அதிகளவானோரின் நாட்டத்தை பெற்றுள்ளது. 

வைத்தியர்.நெவில் பெர்னான்டோ போதனா வைத்தியசாலை, மில்லேனியம் ஐரி, ஹொரிசன் கம்பஸ், SAITM, CINEC கம்பஸ், SLIIT போன்ற பல புகழ்பெற்ற நிறுவனங்களும் அமைப்புகளும் இந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ளன.

முதலாவது கட்டத்தில் 94 அலகுகள் பூர்த்திசெய்யப்பட்டிருந்ததுடன், அவை 11 அடுக்குகளில் அமைந்திருந்தன. கடந்த ஆண்டு ஜுன் மாதம் இது பூர்த்தி செய்யப்பட்டிருந்தது. மாலபே பகுதியில் முதலாவது தொடர்மனை அனுபவத்தை வழங்கும் வகையில் இது அமைந்திருந்தது.

இந்த தொடர்மனைகளில் முதலீடுகளை மேற்கொள்வது அல்லது அவற்றின் உரிமையாண்மையை பெறுவது என்பது இலகுவான காரியமாகும். நிவாசி டிவலப்பர்ஸ் முன்னணி வங்கிகள் மற்றும் நிதிசார் நிறுவனங்களுடன் கைகோர்த்து, கவர்ச்சிகரமான மற்றும் நெகிழ்ச்சியான கொடுப்பனவு கட்டமைப்புகளை வழங்கிய வண்ணமுள்ளது.

நகரின் மத்தியில் தொடர்மனை வாழ்க்கையை எதிர்பார்ப்போருக்கு பொருத்தமான சூழலில் இந்த தொடர்மனை அமைந்துள்ளது. உயரமான நிர்மாணத்தின் மூலமாக, ஒவ்வொரு குடியிருப்பின் உரிமையாளருக்கும் சுற்றுப்புறச்சூழலின் சிறந்த காட்சியை காணக்கூடிய வசதி வழங்கப்படுகிறது. பச்சைப்பசேலென பரந்த பகுதிகள், பசுமையான காற்று, குறைந்தளவு இரைச்சல்கள் மற்றும் ஓய்வான பொழுதை கழிக்கக்கூடிய சூழலை மாலபே கொண்டுள்ளது. 

கடந்த சில மாதங்களில்ரூபவ் இந்நகரம் பல வணிக மற்றும் வதிவிட உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை கண்டுள்ளது. வெளிச்சுற்று அதிவேக நெடுஞ்சாலைக்கு இலகுவாக பயணிக்கக்கூடிய வசதியை கொண்டுள்ளது. வசிப்போருக்கு இதன் மூலமாக இலகுவான முறையில் காலி, மாத்தறை, கட்டுநாயக்க விமானநிலையம், கண்டி மற்றும் குருநாகல் போன்ற பகுதிகளுக்கு இலகுவாக பயணிக்க முடியும்.

தொடர்மனைகள் அனைத்தும் சகல நவீன வசதிகளையும் கொண்டிருக்கும். எரிவாயு, தொலைபேசி மற்றும் கேபிள் தொலைக்காட்சி இணைப்புகள், பொருத்தப்பட்ட பான்ரி அலுமாரிகள், புகை மற்றும் வெப்பம் இனங்காணும் உணரிகள், LED விளக்குகள், வாயு குளிரூட்டிகளை பொருத்துவதற்கான இடவசதிகள் மற்றும் இலவச வாகன தரிப்பிட வசதி ஆகியவற்றை கொண்டிருக்கும். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சுற்றுப்புறச்சூழலை கண்டுகளிக்கக்கூடிய வசதியும் காணப்படுகிறது. இந்த தொகுதியில் ஜிம்னாசியம், நீச்சல் தடாகம், 24 மணிநேர பாதுகாப்பு, மின்பிறப்பாக்கிகள், CCTV மற்றும் தீயணைப்பு சாதனங்கள், இரண்டு பாரமுயர்த்திகள், கழிவுநீர் வழிந்தோடும் பகுதி மற்றும் சுத்திகரிப்பு பகுதி, அழகிய வடிவமைக்கப்பட்ட தோட்டம், சூழலுக்கு பாதுகாப்பான கட்டட அமைப்பு, 2.4 கிலோ மீற்றர் பொது மக்களுக்கான ஜொக்கிங் பகுதி ஆகியன அடங்கியிருக்கும். இந்த தொடர்மனையை சூழல பசுமையான வயல் பகுதிகளும் அமைந்திருக்கும். நகர மத்தியின் நெரிசலிலிருந்து விடுபட்டு அமைதியான சூழலில் தமது வாழ்க்கையை முன்னெடுக்க எதிர்பார்ப்போருக்கு பொருத்தமான தெரிவாக அமைந்துள்ளது” என்றார்.

ஓர்கிட் செயற்திட்டம் நிவாசி டிவலப்பர்ஸ் மாலபே லிமிட்டெடினால் நிர்மாணிக்கப்படுகிறது. கவர்ச்சிகரமான 22 ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப்படுகிறது. இது நவீன குடியிருப்புகள் மற்றும் தொடர்மனைகளை கொண்டிருக்கும். மாலபேயில் அமைந்துள்ள நவீன கிராமம் என Lamudi இனால் தரப்படுப்பதப்பட்டுள்ளது. நிவாசி மற்றும் ICC ஆகியன இணைந்து வெற்றிகரமாக வெவ்வேறு செயற்திட்டங்களை இலங்கையில் பூர்த்தி செய்துள்ளன. 35 வருட கால பன்முக அனுபவத்துடன் நாட்டில் காணப்படும் முன்னணி நிர்மாண கம்பனியாக ICC தெரிவாகியுள்ளது. தர நிர்ணயங்கள் மற்றும் உரிய காலத்தில் விநியோகம் ஆகியவற்றை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.