சு.க. நிலைப்பாட்டை ஆராய நிமல் தலைமையில் குழு

Published By: Robert

23 May, 2017 | 10:50 AM
image

(ஆர்.யசி)

புதிய அர­சியலமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் நிலைப்­பாட்டை ஆராய அமைச்சர் நிமல் சிறி­பா­ல டி சில்வா தலை­மையில் குழு­வொன்றை ஜனா­தி­பதி மைத்­தி­ர­ிபால சிறி­சேன நிய­மித்­துள்ளார். கட்­சியின் மீள் மறு­சீ­ர­மைப்பில் பொது எதி­ர­ணியை இணைத்­துக்­கொள்ளும் இறுதி வாய்ப்பு ஜனா­தி­ப­தி­யினால் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் மத்­தி­ய­குழு கூட்டம்   ஜனா­தி­பதி உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் நேற்று இரவு கூடி­யது. ஸ்ரீலங்கா  சுதந்­திரக்கட்­சியின் மத்­தி­யகுழு உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஜனா­தி­பதி மைத்­தி­ர­ிபால சிறி­சேன தலை­மையில் ஒன்­று­கூ­டிய  இந்த கூட்­டத்தில் அர­சியல் அமைப்பு  திருத்தம், உள்­ளூ­ராட்சி மற்றும் மாகா­ண­ சபை தேர்­தலில் கட்­சியின் நகர்­வுகள், கட்­சியின் மீள் கட்­ட­மைப்பு பணி­களில் மேற்­கொள்­ள­ வேண்­டிய நட­வ­டிக்­கைகள் உள்­ளிட்ட முக்­கிய கார­ணிகள் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்­டுள்­ளது. 

குறிப்­பாக புதிய அர­சியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சிகள் தமது யோச­னை­களை முன்­வைத்­துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி மாத்­திரம் தமது யோச­னை­களை முன்­வைக்­க­வில்லை. இந்­நி­லையில் புதிய அர­சியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் கட்­சியின் நிலைப்­பாடு தொடர்பில் ஆரா­யப்­ப­ட்டதுடன் 20ஆம்  திருத்தம் கொண்­டு ­வ­ரு­வதில் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி எவ்­வாறு செயற்­ப­ட­வுள்­ளது என்­பதை ஆராய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.  நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை, புதிய தேர்தல் முறைமை மற்றும் அதி­காரப்பர­வ­லாக்கல் விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் நிலைப்­பாட்டை ஆராயும் வகையில் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. 

அதேபோல் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகா­ண­ சபை தேர்­தலை நடத்­து­வது தொடர்­பிலும் ஜனா­தி­ப­தி­யுடன் ஆரா­யப்­பட்­டுள்­ளது. உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் கால எல்லை கடந்­துள்ள நிலையில் தேர்­தலை நடத்த சகல கட்­சி­களும் வலி­யு­றுத்தி வரு­கின்­றது. இந்­நி­லையில் ஜனா­தி­பதி மேற்­கொள்­ள­வுள்ள தீர்­மா­னங்கள் தொடர்பில் ஆரா­யப்­பட்­ட­துடன் மாகா­ண­சபை தேர்­தலை நடத்­து­வது குறித்தும் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் செயற்­பா­டுகள் தொடர்­பிலும் கட்­சியின் மத்­தி­ய­குழு ஆராய்ந்­துள்­ளது. 

அதேபோல் கடந்த மே தினக் கூட்­டத்தில் கலந்­து­கொள்­ளாத ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி உறுப்­பி­னர்கள் தொடர்பில் மேற்­கொள்­ள­வுள்ள ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கருத்துப் பரி­மாற்­றல்கள் இடம்­பெற்­ற­துடன் கட்­சியை மீள் மறு­சீ­ர­மைப்பு மேற்­கொள்ளும் செயற்­பா­டுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. அதேபோல் பொது எதிரணியினர் தொடர்ந்தும் தனித்து செயற்பட்டு வரும் நிலையில் கட்சியுடன் இணைத்துக்கொள்ள மேற்கொள்ளும் இறுதி நகர்வுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி மத்தியகுழு உறுப்பினர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01