மகியங்கனை - பிபில வீதியில் ரிதிமாலியத்த மொரகஹகந்துர பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் விமானப்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.

கனரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிளொன்று நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்து பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் ரந்தெனிகல பிரதேசத்தைச் சேர்ந்தவரென்பதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரிதிமாலியத்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.