சோசியல் மீடியா அடிக்ஷன் எச்சரிக்கை..!

Published By: Robert

22 May, 2017 | 02:51 PM
image

இன்றைய திகதியில் பெண்களுக்கு கணவராலும், பெற்றெடுத்த பிள்ளைகளாலும் கொடுக்கப்பட்டு வரும் தொல்லைகள் எல்லையற்றதாக போய்விட்டது. கணவர் குடிகாரராக இருந்தால் அவரை அதிலிருந்து மீட்பதற்காக பெரும் போராட்டத்தை முன்னெடுக்கிறார். அதே சமயத்தில் பிள்ளை படித்து காப்பாற்றுவான் என்று எண்ணி அவனுக்கு லேப்டொப், தொலைபேசி, கணினி என வாங்கி கொடுத்தால் அவன் அதனை முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல், சமூக வலைத்தளங்களில் பயணித்து அதிலேயே லயித்து அதற்கு அடிமையாகி கிடக்கிறார். கணவனை மீட்ட அந்த தாய், தற்போது தன் பிள்ளையை சோசியல் மீடியா அடிக்ஷனிலிருந்து காக்க போராடுகிறார்.

அது என்ன சோசியல் மீடியா அடிக்ஷன்...?

நாளொன்றுக்கு பேஸ்புக், ட்வீட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாத நபர்களுடன் பொழுதைக் கழிப்பது. இதனால் இவர்களின் நாளாந்த நடவடிக்கை ஒரே அறையிலேயே முடங்கிவிட்டது. இவர்கள் காலையில் எழுந்து சூரியனைக் கூட காண்பதில்லை. உடற்பயிற்சி செய்வதில்லை. சாப்பிடுவதிலும் கூட அவசரம் காட்டுகிறார்கள். இவர்களை தங்கள் வழிக்கு கொண்டுவரவும், மற்றவர்களைப் போல் இயல்பானவர்களாக மாற்றவும் அவர்களது பெற்றோர்கள், மன நல நிபுணர்களுடன் இணைந்து கடுமையாக போராடி வருகின்றனர்.

சோசியல் மீடியா அடிக்ஷன் இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. ஜப்பானில் நன்கு படித்த திறமையான ஒரு மில்லியன் இளம் வயதினர் சமூக வலைத்தளங்களே கதி என்று அறைக்குள் அடைந்து கிடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மருத்துவ உலகம் ஹிக்கிகோமோரி என்று பெயரிட்டுள்ளன. பொதுவாக இது போன்ற பாதிப்பிற்கு ஆளாகும் இளைய தலைமுறையினர் எற்கனவே ஓரளவுமன அழுத்தம், மனம் சார்ந்த சிக்கல்கள்,மற்றவர்களுடன் சகஜமாக பழக முடியாதவர்கள் தான் இதற்கு அடிமையாகிபோகிறார்கள். வேறு சிலரோ ஏதோ ஓர் ஆர்வத்தில் இதற்குள் வந்துவிட்டு பின் வெளியேறத் தெரியாமல் இதிலேயே உழல்கிறார்கள். இவர்கள் போதை பொருளுக்கு அடிமையானவர்களை விட ஆபத்தானவர்கள் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

எம்முடைய உணர்வுகள், நடத்தை மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதில் மூளையில் உள்ள அமிக்டாலா என்ற பகுதியின் பங்களிப்பு முக்கியமானது. அதே போல் நீண்ட நேரத்திற்குஇணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு எம்முடைய முன் மூளையில் உள்ள ஸ்ட்ரியட்டம் என்ற நுட்பமான பகுதி பாதிப்பிற்கு ஆளாகிறது. அத்துடன் இத்தகைய நுட்பமான நரம்பு செல்கள் அமைந்திருக்கும் பகுதியில் இயல்பாக சுரக்கும் வேதிப்பொருளான டோபமைன், தன் இயல்பு நிலையிலிந்து விலகி விடுகிறது. இதனால் இத்தகைய சுரப்பு அதிகமாகவோ அல்லதுஇயல்பிற்கு குறைவாகவோ சுரந்து மேலும் மேலும் தொடர்புடைய இணையத்தளத்தில் அடிமையாக கிடக்கும் சூழலை உருவாக்குகிறது. அதனால் இதிலிருந்து வெளியேற வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக இரண்டு மணித்தியாலங்கள் வரை தான் இணையத்தில் உலா வரவேண்டும் என்ற கட்டுபாட்டை வைத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் இவர்களுக்கு மனதை  ஆரோக்கியமாக வைத்திருப்பதான சிகிச்சையையும் மேற்கொள்ளவேண்டும். இதனைபின்பற்றினால் நாளடைவில் இதிலிருந்து மீளலாம்.

Dr. L. விஜயகுமார்,

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29