வெள்­ள­வத்தை சார்­லிமன்ட் வீதியில் சவோய் திரை­ய­ரங்கின் பின்னால் அமைந்துள்ள ஐந்து மாடி வரவேற்பு மண்­டபம் இடிந்து விழுந்­ததில் பலியான அட்டன், பத்தனை கிறேக்லி தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனின் இறுதி ஊர்வலம் இன்று முற்பகல் இடம்பெற்றது. இளைஞனின் அகால மரணத்தால் கிரகரி தோட்டமே சோகமயமாக காணப்பட்டது.

வெள்­ள­வத்தை சார்­லிமன்ட் வீதியில் சவோய் திரை­ய­ரங்கின் பின்னால் அமைந்துள்ள 'எக்­ச­லன்ஸி' என்ற பெயரைக் கொண்ட ஐந்து மாடி வரவேற்பு மண்­டபம் இடிந்து விழுந்­ததில் மூவர் உயி­ரி­ழந்ததுடன் 21 பேர் காய­ம­டைந்­தமைந்திருந்தனர். இதில் குறித்த வரவேற்பு மண்டபவத்தில் பணியாற்றிய பத்தனை கிறேக்லி தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இராமர் நிரோஷன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த கட்­டி­டத்தின் உரி­மை­யாளரான 62 வய­து­டைய மொஹம்மட் சப்ராஸ் சஹஜான iது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.