நாடளா­விய ரீதியில் மழை­யுடன் கூடிய வானிலை இன்றும் நீடிக்கும்..!

Published By: Robert

22 May, 2017 | 11:09 AM
image

(ந.ஜெகதீஸ்)

நாட­ளா­விய ரீதியில் கடும் மழை மற்றும் இடி­யுடன் கூடிய வானிலை இன்றும் பதி­வாகும் என வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

வெப்­ப­மான கால­நிலை நில­விய கொழும்பு உள்­ளிட்ட நாட்டின் பல பகு­தி­களில் தற்­போது தொடர்ச்­சி­யான மழை வீழ்ச்சி பதி­வாகி வரு­கின்­றது. இது தொடர்பில் வளி மண்­ட­ல­வியல் திணைக்­கள   அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாவது,

நாட­ளா­விய ரீதியில் இன்றும் இடி­யுடன் கூடிய மழை­வீழ்ச்சி பதி­வாகும் என எதிர் பார்க்­கப்­ப­டு­கின்­றது. அத­ன­டிப்­ப­டையில் மேல், சப்­ர­க­முவ, வடமேல், தென், மத்­திய மற்றும் ஊவா மாகா­ணங்­களில் குறித்த மழை வீழ்ச்சி பதி­வாகும் என எதிர் ­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு மழை பெய்யும் சந்­தர்ப்­பங்­களில் அதிக காற்றும் வீசக்­கூடும் நிலை காணப்­ப­டு­கின்­றது.  மேல், சப்­ர­க­முவ, வடமேல், தென், மத்­திய மற்றும் ஊவா மாகா­ணங்­களில் மணிக்கு 50 கிலோ­மீற்றர் வேகத்­திலும் காற்று வீசும் எனவும் தெற்கு,தென்­கி­ழக்கு, வட மேற்கு போன்ற கடற்­பி­ர­தே­சங்­களில் மணிக்கு 60 கிலோ­மீற்றர் முதல் 70 கிலோ­மீற்றர் வேகத்தில் காற்று வீசக்­கூடும் எனவும் எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை கடு­மை­யான இடி மின்­ன­லுடன் கூடிய மழை பெய்யும் சந்­தர்ப்­பங்­களில் மக்கள் மின்னல் தாக்­கங்கள் குறித்து மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறும் அத்­தி­ணைக்­க­ளத்­தினால் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. 

தொடர்ச்­சி­யாகபெய்த கடும் மழைக்­கா­ர­ண­மாக நாட்டின் பல பாகங்­க­ளிலும் பல அனர்த்தங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. 

அத்துடன் மலைப்­பாங்­கான இடங்­களில் மண்­ச­ரிவு மற்றும் தாழ்வு நில பிர­தே­சங்­களில் வெள்ள அனர்த்தம் ஏற்­படும் அபா­யமும் காணப்­ப­டு­கின்­றது. அதி­க­மான மழை மற்றும் மேக­ மூட்­டத்­து­ட­னான கால நிலை இருக்கும் சந்தர்ப்பங்களில் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறும் வளிமண்டல திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31