சிறுவர்களின் கல்வி வளர்ச்சியில் அதிபர் ஆசிரியர்களை போன்று பெற்றோர்களின் பங்களிப்பும் மிக முக்கியம். பாடசாலையில் சேர்த்துவிட்டோம் என்று கவனக்குறைவாக இருந்துவிடாமல் அவர்களின் கற்றலில் எப்பொழுதும் மிக அக்கரையோடு செயற்பட வேண்டுமென மத்திய மாகாண விவசாயதுறை மற்றும் இந்து கலாசார அமைச்சர் எம்.ரமேஸ் தெரிவித்தார்.

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய முதலாம் தரத்திற்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வின் போதே இதனைத் தெரிவித்தார். மேலும் மத்திய மாகாணத்தில் வளர்ந்து வரும் பாடசாலைகளில் இப்பாடசாலை முக்கியதுவம் வாய்ந்தது. எதிர்வரும் காலங்களிலும் இப்பாடசாலைக்கான அபிவிருத்தி திட்டங்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட உள்ளதோடு, பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிவருத்தி குழுவினரின் வேண்டுக்கோளுக்கிணங்க தளபாடங்கள், மலசலகூட வசதிகள் உடனடியாக பெற்றுத் தரப்படும் எனவும் அமைச்சர் எம்.ரமேஸ் மேலும் தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)